சித்தா மருத்துவர் ஷர்மிகா 15 நாட்களில் நேரில் ஆஜராக வேண்டும்! இந்திய மருத்துவமனை ஆணையம் வெளியிட்ட உத்தரவு!
இந்திய மருத்துவமனை ஆணையம் சித்தா மருத்துவர் ஷர்மிகா விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது நல்லவர்களுக்கு தான் குழந்தை பிறக்கும் என சித்தா மருத்துவர் ஷர்மிகா இணையத்தில் மருத்துவ ஆலோசனை வழங்கி வந்தார்.இந்நிலையில் தவறான தகவலை கூறுவதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
மேலும் இவர் யூடியூப்பில் நல்ல மனது உள்ளவர்களுக்கு தான் குழந்தை பிறக்கும், நுங்கு சாப்பிட்டால் மார்பகங்கள் பெரிதாகும்,குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் உண்டாகும்,மாட்டுக்கறி சப்ப்பிட்டால் பல நோய்கள் வரும்.மேலும் ஒரு குலோப் ஜாமுன் சாப்பிட்டால் மூன்று கிலோ எடை அதிகரிக்கும்,முகம் பொழிவு பெற தினமும் வெறும் வயிற்றில் நெய் எடுத்துகொள்ள வேண்டும் என பல்வேறு கருத்துகளை யூட்யூப்பில் சித்தா மருத்துவர் ஷர்மிகா பதிவிட்டு வந்தார்.
மேலும் இவர் கருத்துகள் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தது.இதனை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.இவ்வாறான கருத்துகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்தா மருத்துவர் ஷர்மிகா அளித்திருந்தார்.அதில் நானும் மனுஷிதானே தவறுகள் நட்டப்பது இயல்பு தான்.இதனை யாராவது தவறா எடுத்துக்கிட்டா என்னை மன்னிச்சுருங்க என கேட்டுள்ளார்.
மேலும் நுங்கு சாப்பிட்டால் உடல் எடை கூடும்,உடல் எடை அதிகரித்தால் மார்பகங்களும் வளரும் அதனை தான் நான் சொன்னேன் என விளக்கம் அளித்தார்.குலோப் ஜாமூன் சாப்பிட்டால் எடை கூடுமா என்ற தகவலும் விளக்கம் அளித்துள்ளார்.இனிப்பு சாப்பிட்டால் எடை கூடும் என கூறினார்.
கடந்த சில நாட்களாகவே சித்தா மருத்துவர் ஷ்ர்மிகா இணையத்தில் தவறான மாறுவார்கள் ஆலோசனை வழங்குவது அவர்மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு புகார் எழுந்து வருகின்றது.இதனால் சித்தா மருத்துவர் ஷர்மிகா தொடர்பாக புகார் எழுந்ததையடுத்து 15 நாட்களுக்குள் நேரில் ஆஜராக மருத்துவர் ஷர்மிகாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.