கால் மேல் கால் போட்டு உட்காரும் நபரா நீங்கள்? இதை கவனிக்காமல் விட்டால் ஆபத்து உங்களுக்கு தான்..!!

Photo of author

By Priya

Crossed Leg Sitting in Tamil: நம் பாட்டி அடிக்கடி இந்த வார்த்தையை கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். பெண் பிள்ளை இப்படி கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது. பெரியவங்க முன்னாடி கால் மேல் கால் போட்டு உட்காந்து பேசாதே! என்று கூறி நாம் அடிக்கடி கேட்டிருப்போம். ஏன் சில சமயங்களில் நம் அம்மாவும் அவ்வாறு கூறுவார். ஆனால் அவர்கள் ஏன் அவ்வாறு கூறுகிறார்கள். இதை எல்லாம் ஒரு விஷயமா இன்னும் பாட்டியும், அம்மாவும்  அந்தக்காலத்திலேயே இருக்கிறார்கள் என்று ஒரு சிலர் நினைப்பார்கள்.

பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால் உடலில் பல விதமான நாேய்கள் ஏற்படும். ஆனால் இதன் அறிவியல் தன்மை புரியாமல் பெரியவர்களுக்கு மரியாதை என கூறி உண்மையான காரணம் என்னவென்றே தெரியாமல் போய்விட்டது. பெரியவர்களுக்கு மரியாதை ஒருபுறம் இருக்க கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை (crossed leg sitting position in Tami பார்க்கலாம்.

ஏன் உட்கார கூடாது? 

பெண்களை மட்டும் அவ்வாறு உட்கார வேண்டாம் என்று கூறுவதற்கு முதல் காரணம் என்னவென்று பார்த்தால் கால் மேல் கால் போட்டு உட்காரும் போது, கருப்பைக்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை, நீர்க்கட்டி உருவாகுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இந்த பிரச்சனைகள் சரிவர கவனிக்காமல் விட்டால் மேலும் இது பாதிப்பை ஏற்படுத்தும். ஆரம்பத்தில் இது பெரிய விஷயமாக தெரியாது. நாம் இவ்வாறு தொடர்ந்து கால் மேல் கால் போட்டு உட்காரும் பழக்கம் வைத்துக்கொண்டே இருந்தால் கட்டாயம் கருப்பை பிரச்சனைக்கு வழிவகுக்கும்.

கர்ப்பிணி பெண்கள் கால் மேல் போட்டு உட்கார்ந்தால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இது அழுத்தத்தை கொடுக்கும். குழந்தை பிறக்கும் சமயத்தில் மேலும் இது சிக்கலை ஏற்படுத்தி விடும்.

ஆண்களோ, பெண்களோ கால் மேல் கால் போட்டு உட்காரும் போது இரத்த அழுத்தம் ஏற்படும் என கூறப்படுகிறது. காரணம் ஒரு கால் மேல் மற்றொரு கால் போட்டு உட்காரும் போது அது கால்களுக்கு செல்ல வேண்டிய இரத்த நரம்புகளுக்கு அழுத்தை ஏற்படுத்துகிறது. மேலும் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தத்தை அனுப்புவது இதயம் தான். அது இதயத்தில் சிக்கலை உண்டாக்குகிறது.

மூட்டுவலியை ஏற்படுத்தும். கால் மேல் கால் போட்டு உட்கார்ந்த சிறிது நேரத்திற்கு பிறகு கால் மறத்து போய் விடும். இவ்வாறு தொடர்ந்து நடந்துக்கொண்டிருந்தால் அது மூட்டு வலியில் கொண்டு போய் சேர்த்துவிடும்.

சிலர் உட்காரும் போது நேராக கூட உட்கார மாட்டார்கள் நாற்காலியில் சாய்ந்தவாறு உட்கார்ந்து கால் மேல் கால் போட்டு உட்காரும் போது நிச்சயம் முதுகுதண்டு பிரச்சனையை ஏற்படுத்தி விடும்.

மேலும் பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக இவ்வாறாக உட்காருகிறார்கள். அது அவர்களுக்கு உடல்ரீதியான பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே முடிந்த அளவிற்கு இவ்வாறு உட்காராமல் இருப்பது நல்லது.

மேலும் படிக்க: Sinus remedy in tamil: தலை பாரமாக உள்ளதா? பின் கழுத்து வலி உள்ளதா? இத பண்ணுங்க 2 நிமிடத்தில் பாரம் குறைந்துவிடும்..!!