உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா? அப்போ இவர்கள் தான் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்..!

Photo of author

By Priya

law of attraction in Tamil: இதனை தமிழில் ஈர்ப்பு விதி என்று கூறுகிறோம். வாழ்க்கையில் நடக்கும் சில விடயங்களை ஒருசிலர் அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்கள். மற்றவர்கள் தங்களின் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதை முடிவு செய்து அதனை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறார்கள். அறிவியலை நம்பும் சிலர், ஆன்மீகத்தை நம்பும் சிலர் என்று இருக்க, இதில் ஆன்மீகத்தை நம்பாமல் அறிவியலை மட்டும் நம்பும் சிலர் என்று இருக்கிறார்கள். அந்த வகையில் நாம் ஒரு சில விடயங்களை புரிந்துக்கொள்ள வேண்டும். இந்த பிரபஞ்சத்தில் மனித சக்திக்கும் அப்பாற்பட்ட சில சக்திகள் உண்டு என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்வோம்.

அது இயற்கையாக இருக்கலாம் அல்லது கடவுளின் செயல் என்றும் சிலர் நம்பலாம். அவ்வாறு இருக்கையில் இந்த பிரபஞ்சம் என்பது தானாக உருவாகியது. இந்த பிரபஞ்சத்திற்கு தனி சக்தி உண்டு. அந்த பிரபஞ்சதிடம் நாம் எது கேட்டாலும் கொடுக்கும் என்று கூறி ஒரு சிலர் ஈர்ப்பார்கள் அது தான் law of attraction. ஆனால் அப்படி பிரபஞ்ச சக்தியுடன், நம் ஈர்ப்பு சக்தி சேருமா? நமக்கு கிடைக்குமா? என்றால் அதற்கு சில விதிகள் உண்டு. நாம் இந்த பதிவில் இந்த பிரபஞ்ச சக்தியின் மூலம் ஒருவர் உங்களை பற்றி நினைத்தால் உங்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் என்னவென்று தற்போது காணலாம்.

அறிகுறிகள்

ஒரு சிலர் அடிக்கடி இந்த வாசகம் கூறுவார்கள் எண்ணம் போல் வாழ்க்கை என்று. நம்முடைய எண்ணங்கள் சரியானதாக இருந்தால் அதன் மூலம் நமக்கு நேர்மறையான ஆற்றல் கிடைக்கும். அப்போது நம்மை சுற்றியும் நேர்மறையான ஆற்றல் மட்டும் தான் இருக்கும். பிரபஞ்சமும் அதனை உடனடியாக ஈர்க்கும் அப்போது நாம் நினைத்த காரியம் கைக்கூடும்.

ஒருவர் உங்களை பற்றிய சிந்தனையில் இருந்துக்கொண்டு இருக்கிறார் என்றால், அவரையும் அறியாமல் உங்களை அவர் ஈர்க்கிறார். உங்களை விட்டு ஒருவேளை சில காரணங்களுக்காக அவர் பிரிந்து சென்றிருக்கலாம். இருந்த போதும் மறக்க முடியாமல் அவர் உங்களை நினைத்தால் உங்களுக்கு ஒரு சில அறிகுறிகள் ஏற்படும்.

திடீரென்று இரவு 2 மணி முதல் 4 மணிக்குள் உங்களுக்கு முழிப்பு வரலாம். இந்த நேரத்தில் பூமியில் உள்ள உயிர்களின் ஆற்றல்கள் குறைவானதாக இருக்கும். அனைவரும் உறங்கி கொண்டிருக்கும் வேளையில் ஆழ் மனது உறங்காது. எதையாவது நினைத்துக்கொண்டிருக்கும். அப்போது அந்த சிந்தனை, அந்த ஆற்றல் பிரபஞ்சத்தை சென்று அடையும். உங்களுடைய ஆழ் மனது சிந்தனை, உங்களை நினைத்தவரின் ஆற்றலை விட குறைவானதாக இருந்தால், அவரின் ஆற்றல் உங்கள் ஆற்றலுடன் மோதும் போது உங்களையும் அறியாமல் திடீரென்று முழிப்பு வரும்.

அந்த சமயம் உங்களையும் அறியாமல் நீங்கள் வருத்தமாக உணருவீர்கள். மீண்டும் படுத்தால் தூக்கம் வராது.

எப்போதும் தனிமையை உணர்வீர்கள். வெறுமையாக உள்ளது போல தோன்றும். ஆனால் சில சமயம் மனதின் ஓரத்தில் ஒரு மகிழ்ச்சி ஒட்டிக்கொண்டிருக்கும். அதனை வெளிபடுத்த முடியாமலும் தவிப்பீர்கள்.

ஒருவேளை உங்களை விட்டு பிரிந்தவர்கள் உங்களை நினைத்துக்கொண்டிருந்தால், அவர்களின் குரல் உங்களுக்கு திடீரென்று கேட்கும். ஆனால் அருகில் யாரும் இருக்க மாட்டார்கள்.

உங்களுக்கு எந்த விதமான கனவுகள் வந்தாலும், அது அப்படியே நினைவிருக்கும். காலையில் நினைத்துப்பார்த்தால் தெளிவாக கூறுவீர்கள்.

அடிக்கடி உடம்பெல்லாம் புல்லரிக்கும்.

மேலும் படிக்க: அதிகாலை முழிப்பு வருகிறதா? அப்போ இதான் அர்த்தம்..!