இந்த 2 பொருள் இருந்தா போதும் 90ஸ் ஸ்பெஷல் தேங்காய் மிட்டாய் தயார்..!!

0
106
thengai mittai recipe

thengai mittai recipe: தற்போது இருக்கும் குழந்தைகள் வாயில் நுழையாத பெயரில் என்னவெல்லாமோ ஸ்வீட்ஸ் செய்து சாப்பிட்டு வருகிறார்கள். அந்த வகையில் 90ஸ் கிட்ஸ்கள் அதிக அளவு கடைகளில் வாங்கி சாப்பிட்ட ஸ்வீட் என்றால் அது தேன் மிட்டாய் மற்றும் தேங்காய் பர்பி, சவ்வு மிட்டாய், புளியங்காய் மிட்டாய் ஆகியவை தான் தற்போது இந்த மிட்டாய்கள் அனைத்தையும் கடைகளில் தேடி பார்த்தாலும் அவ்வளவாக கிடைப்பது இல்லை.

ஏதேனும் சிறிய மளிகை கடைகளில் தான் இந்த மிட்டாய்கள் கிடைக்கின்றன. அதனை தற்போது வாங்கி சாப்பிடும் போதும் நமக்கு அவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும். நாம் இந்த பதிவில் வெறும் இரண்டு பொருள் மட்டும் வைத்து சுவையான தேங்காய் பர்பி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • தேங்காய் துருவியது – 1 கப்
  • வெல்லம் – 1 கப்

செய்முறை

அடுப்பில் ஒரு கடாய் ஒன்றை வைத்து அதில் எடுத்து வைத்துள்ள வெல்லத்தை சிறு சிறு துண்டாக நறுக்கி கடாய் போட்டு சிறிதளவு நீர் ஊற்றி கொதிக்க வைத்துக்கொள்ளவும்.

அதன் பிறகு கொதித்த வெல்லத்தை வடிக்கட்டி மீண்டும் கடாயில் கொதிக்க விடவும். அதன்பிறகு அதில் துருவி வைத்துள்ள தேங்காயையை கொட்டி நன்றாக கிளறி விடவும். கெட்டியான பிறகு ஒரு தட்டில் கொட்டி ஆறவிட வேண்டும்.

ஆறியதும் அதனை கையால் நன்றாக அழத்தி பிசைய வேண்டும். அதன் பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அந்த உருண்டையின் நடுவில் ஒரு பாட்டில் மூடியை வைத்து அழுத்தினால் அழகான வடிவம் கிடைக்கும்.

தற்போது சுவையான தேங்காய் மிட்டாய் தயார். தேவைப்பட்டால் ஏலக்காய் தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க: இனி பூரி செய்ய கோதுமை மாவு மைதா வேண்டாம்..! உப்பலான இந்த பூரியை ட்ரை பண்ணி பாருங்க..!