நாம் வணங்கும் கடவுளை மீறி ஏதேனும் தீங்கு செய்தால் அதை தெய்வ குத்தம் என்று சொல்கின்றோம்.பிற உயிர்களை காயப்படுத்துவது,இயற்கைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது,பிறருக்கு துன்பம் கொடுத்து அதில் மகிழ்ச்சி காண்பது போன்றவை தெய்வ குத்தமாகும்.
நாம் வழிபாடும் கடவுளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டால் நம் வாழ்வில் அதிக எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும்.நாம் தெய்வ குத்தத்திற்கு ஆளாகிவிட்டோம் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறுகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம்.
தெய்வ குத்த அறிகுறிகள்:
1)உங்களுக்கு தொடர் மன உளைச்சல்,மனக் கவலை இருந்தால் அது தெய்வ குத்தத்திற்கான அறிகுறியாக இருக்கலாம்.
2)வாழ்வில் எப்பொழுதும் சோகம்,கோபம் மட்டுமே இருந்தால் தெய்வ குத்தமாகிவிட்டது என்று அர்த்தம்.
3)தொடர்ந்து மனம் மற்றும் உடல் ரீதியான பாதிப்புகள் இருந்தால் தெய்வ குத்தம் ஏற்பட்டுவிட்டது என்று அர்த்தம்.
4)அதேபோல் பணம் சம்மந்தப்பட்ட பிரச்சனை,கடன் பிரச்சனையும் தெய்வ குத்தத்திற்கான அறிகுறியாக இருக்கக் கூடும்.
5)செய்து கொண்டிருக்கும் தொழிலில் தொடர் நஷ்டம் ஏற்பட்டால் தெய்வ குத்தமாகிவிட்டது என்று அர்த்தம்.
6)செய்து கொண்டிருக்கும் வேலையை இழத்தல்,வேலை கிடைக்காமல் போதல்,வேலை கிடைக்க தாமதமாதல் போன்றவை தெய்வ குத்தம் ஏற்பட்டதற்கான காரணங்களாகும்.
7)அடிக்கடி குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் தெய்வ குத்தம் உண்டாகிவிட்டதாக அர்த்தம்.
9)தினந்தோறும் கணவன் மனைவி இடையே சண்டை,பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையே சண்டை வருதல் போன்றவை தெய்வ குத்தம் ஏற்பட்டுவிட்டதை காட்டுகிறது.
மேலே சொல்லப்பட்டுள்ள பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள் அதில் இருந்து மீள குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு மாதத்தின் அமாவாசை நாளில் குலதெய்வத்தை வழிபட்டு வந்தால் தெய்வ குத்தம் விலகும்.