சிம்புவும் சந்தானமும் மீண்டும் இணைய போறாங்களாம்!! அது என்ன படம்னு நீங்களே பாருங்க!!

Photo of author

By CineDesk

சிம்புவும் சந்தானமும் மீண்டும் இணைய போறாங்களாம்!! அது என்ன படம்னு நீங்களே பாருங்க!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் சிலம்பரசன். அவரது ரசிகர்கள் அவரை சிம்பு என்று அன்புடன் அழைத்து வருகின்றனர். இவர் விஜய டி. ராஜேந்திரனின் மகன் ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு முதல் முறையாக விஜய டி.ராஜேந்திரன் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது கொடுத்து கவுரவித்தது. இவர் 15 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் திரையுலகில் மிகவும் கம்மியான எண்ணிக்கையில் படம் நடித்திருந்தாலும் இவருக்கென ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

மேலும் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சந்தானம். இவர் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகழ்பெற்றார். அதைத் தொடர்ந்து 2004 இல் இவர் மன்மதன் திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். பின்னர் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சந்தானம் மற்றும் சிம்பு இருவரும் கூட்டணியாக இணைந்து நடித்த படங்கள் எல்லாமே செம ஹிட் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் தற்போது சந்தானம் கதாநாயகனாக அறிமுகமான பிறகு யாருடைய படத்திலும் கூட்டணியில் நடிக்கவில்லை. ஆனால் இவர்களின் கூட்டணி படத்தை இன்றும் இவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.. இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய இயக்குனர் கோகுல் தற்பொழுது சந்தானம் மற்றும் சிம்புவை இணைத்து ஒரு படம் உருவாக்க உள்ளாராம். மேலும் அந்தப் படத்திற்கு கொரோனா குமார் என்று பெயர் வைத்துள்ளார்களாம். இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கதையாகத்தான் இருக்கும் என்கிறார். இந்த செய்தி தற்பொழுது பல வருடங்களாக சிம்பு மற்றும் சந்தானத்தின் கூட்டணியை பார்க்க காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த படத்திற்காக அவர்களது ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்ப்பில் உள்ளனர்.