வெந்து தணிந்தது காடு படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட சிம்பு… வைரல் புகைப்படம்!

0
140

வெந்து தணிந்தது காடு படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட சிம்பு… வைரல் புகைப்படம்!

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு.  இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து தோல்விப் படங்களாக நடித்து வந்த சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக மாநாடு அமைந்தது. சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் மாநாடு திரைபடம் வெளியாகி 100 நாட்கள் ஓடி சாதனைப் படைத்தது.

மேலும் இந்த வெற்றியால் அவரின் மார்க்கெட் பல மடங்கு அதிகமாகி சிம்புவின் திரை வாழ்வில் இது ஒரு முக்கியமான படமாக அமைந்தது. மாநாடு படத்தை தொடர்ந்து தற்போது சிம்புவின் அடுத்த ரிலீஸாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். செப்டம்பர் 15 ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளனர். தமிழக திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவதும் முடிந்துள்ள நிலையில் தற்போது டப்பிங் பணிகளை முடித்துள்ளார் சிம்பு. இது சம்மந்தமாக அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.