சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது

மாநாடு படத்தின் பூஜையில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, வெங்கட்பிரபு, கலைப்புலி எஸ் தாணு உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்றைய பூஜைக்கு பின்னர் ஓரிரு காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து நாளை முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது

இன்று தொடங்கும் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதி வரை தொடர்ச்சியாக நடைபெறும் என்றும் இந்த முதல்கட்ட படப்பிடிப்பில் 40 சதவீத படப்பிடிப்புகள் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது

மாநாடு படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி அமரன், மனோஜ், டேனியல் உள்பட பலர் நடிக்கவுள்ளனர். யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் ப்ரவீண் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
