இழுத்துக்கொண்டே சென்ற ‘பத்து தல’… ஒரு வழியாக வெளியான அறிவிப்பு… ரசிகர்களுக்கு ‘டபுள் ட்ரீட்’

0
185

நடிகர் சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தம் ஆன திரைப்படம் ‘பத்து தல’. அப்போது மஃப்டி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. கன்னட படமான மஃப்டி ரீமேக்கை இயக்க ஒரிஜினல் கன்னட படத்தின் இயக்குனர் நர்தனே ஒப்பந்தம் செய்யப்பட்டார். படமும் தொடங்கப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் சிம்புவின் கால்ஷீட் சொதப்பல்களால் படம் கிடப்பில் போடப்பட்டது.

ஒரு கட்டத்தில் படம் கைவிடப்பட்டதாகவே நினைத்த நிலையில் திடீரென்று ‘பத்து தல’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இயக்குனர் நர்தனுக்கு பதில் காந்தி கிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

சிம்பு இல்லாத மற்ற காட்சிகளை படக்குழுவினர் தென் தமிழகத்தில் படமாக்கி முடித்துள்ளனர். சிம்பு ‘வெந்து தணிந்தது காடு’ ஷூட் முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் இதுவரை சிம்பு ஷுட்டிங்கில் கலந்துகொள்ளவில்லை. தன் தந்தையின் சிகிச்சைக்காக இப்போது லண்டனில் இருக்கிறார். இந்நிலையில் திடீரென சர்ப்ரைஸாக ‘பத்து தல’ திரைப்படம் டிசம்பர் 14 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸாகிறது. இதனால் இந்த ஆண்டு சிம்புவின் இரண்டு படங்கள் குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து ரிலீஸாகின்றன. இது சிம்பு ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Previous articleபப்பாளிபழத்தில் இவளவு நன்மைகள் உள்ளதா! அனைவரும் அறிந்து கொள்வோம்!
Next articleபொருளாதார நெருக்கடி காரணமாக பேருந்து கட்டணம் உயர்வு! அதிர்ச்சியில் பொதுமக்கள்