பத்து தல படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Photo of author

By Vinoth

பத்து தல படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்கும் பத்து தல படத்தின் படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.

நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தம் ஆன திரைப்படம் ‘பத்து தல’. அப்போது மஃப்டி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. கன்னட படமான மஃப்டி ரீமேக்கை இயக்க ஒரிஜினல் கன்னட படத்தின் இயக்குனர் நர்தனே ஒப்பந்தம் செய்யப்பட்டார். படமும் தொடங்கப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் சிம்புவின் கால்ஷீட் சொதப்பல்களால் படம் கிடப்பில் போடப்பட்டது.

ஒரு கட்டத்தில் படம் கைவிடப்பட்டதாகவே நினைத்த நிலையில் திடீரென்று ‘பத்து தல’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இயக்குனர் நர்தனுக்கு பதில் காந்தி கிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இசையமைப்பாளராக ஏ ஆர் ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். சிம்பு இல்லாத மற்ற காட்சிகளை படக்குழுவினர் தென் தமிழகத்தில் படமாக்கி முடித்துள்ளனர். சிம்பு ‘வெந்து தணிந்தது காடு’ ஷூட் முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் டப்பிங்கை முடித்த சிம்பு தற்போது பத்து தல படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இதையடுத்து மொத்த படக்குழுவும் தற்போது கர்நாடகாவில் உள்ள பெல்லாரியில் முகாமிட்டு காட்சிகளை படமாக்கி வருகின்றனர். அங்கு ஷூட்டிங் முடிந்ததும் அடுத்து சென்னை மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து ஒரு மாதத்துக்கு ஷூட் நடத்தப்பட்டு மொத்த படமும் முடிய உள்ளதாம்.

இந்நிலையில் தற்போது கர்நாடகாவின் பெல்லாரி பகுதியில் நடந்த படப்பிடிப்பு நிறைவுற்றுள்ளதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. மேலும் இயக்குனரோடு சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.