லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பெயரை பெற்ற நடிகர் சிம்பு அவர்கள் சிறுவயதில் இருந்து நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டு பல படங்களில் தன்னுடைய திறமையால் பேசப்பட்டவர். அதன் பின் ஹீரோவாக களமிறங்கி சிறிது காலத்திலேயே விமர்சனங்களின் உச்சத்தில் குடி கொண்டவராக மாறினார்.
கெரியரில் கேப் எடுத்துக்கொண்டு நடிகர் சிம்பு அவர்கள் அதன் பின் மாஸ் என்ட்ரி கொடுத்த விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் மாநாடு திரைப்படத்திற்காக அதிக அளவில் பேசப்பட்டார். அதன் பின் தற்பொழுது மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் தக் லைப் மற்றும் பார்க்கிங் பட இயக்குனருடன் இணைந்து ஒரு திரைப்படம் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தின் இயக்குனர் சிம்பு குறித்து சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
அவ்வாறு அந்த இயக்குனர் பகிர்ந்தது பின் வருமாறு :-
இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் இயக்கிய திரைப்படம் ஒன்றினை குறிப்பிட்ட நடிகர் சிம்பு அவர்கள் இது போன்ற கதை ஒன்றை எனக்காக தயார் செய்யுங்கள் என தெரிவித்ததாகவும் அதற்கு இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் ஜெய் அவர்களுக்காக எழுதி வைத்த திரைக்கதையான ஈஸ்வரனின் உடைய கதையை சிம்பு அவர்களிடம் தெரிவித்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஈஸ்வரன் திரைப்படத்தின் கதையைக் கேட்ட நடிகர் சிம்பு அவர்கள் இயக்குனரை காரி துப்பிவிட்டாராம். அதன்பின் சிம்பு அவர்களுக்கு ஏற்றவாறு ஈஸ்வரன் திரைப்படத்தின் கதையில் சில மாற்றங்களை மேற்கொண்டு இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் சிம்புவை வைத்து படத்தை தயாரித்ததாக தெரிவித்திருக்கிறார்.