மாநாடு படத்துக்காக சிம்பு செய்யும் வேலை : நம்பலாமா ? என ரசிகர்கள் கேள்வி !

Photo of author

By Parthipan K

மாநாடு படத்துக்காக சிம்பு செய்யும் வேலை : நம்பலாமா ? என ரசிகர்கள் கேள்வி !

மாநாடு படத்துக்காக சிம்பு கடினமாக உடல் பயிற்சி செய்து சிக்ஸ் பேக் கொண்டு வரப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிம்புவை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், அந்த படம் முடியும் வரை வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு தான் இருப்பார்கள். அந்த அளவுக்கு சிம்பு டார்ச்சர் கொடுப்பார் என்றும் படப்பிடிப்புக்கு குறித்த நேரத்தில் வரமாட்டார் என்றும் அவர் மீது பரவலாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. சிம்புவால் அன்பானவன் அடங்காதவன் அசராதவன், வல்லவன் உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு புகார் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் மீண்டும் மீண்டும் தயாரிப்பாளர்கள் தாமாகவே அவரைத் தேடிச் சென்று பின்னர் ஏமாறுவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்ச. சிறுபட தயாரிப்பாளராக இருந்த அவருக்குப் பலரும் சிம்பு படம் வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் துணிந்து இறங்கினார் சுரேஷ் காமாட்சி. ஆரம்பகட்ட பணிகளுக்காகவே ஒருசில கோடிகளை செலவு செய்தார். இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு திட்டமிட்டபடி வராமல் இழுத்தடித்து வந்தார். இடையில் உடல் எடையைக் குறைப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுவந்தார். ஆனால் உடை எடையில் எந்த மாற்றமும் இல்லஒ.

சிம்புவின் இம்சைகளால் படத்தை கைவிடுவதாக சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இதனால் சிம்புவின் இமேஜ் மேலும் டேமேஜ் ஆக, சிம்புவின் தாயார் சிம்பு கண்டிப்பாக மாநாடு படத்தில் நடிப்பார் என அறிவித்தார். இதையடுத்து இதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்ட்டார் சிம்பு என தகவல்கள் பரவின. இந்த செய்தியை உறுதிப்படுத்துவது போல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘விரைவில் சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு தொடங்கும்’ என அறிவித்துள்ளார்.

இப்போது ஒருவழியாக இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது மாநாடு பணிகள். இம்மாத இறுதியில் படம் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது சிம்பு ராப்பகலாக கஷ்டப்பட்டு சிக்ஸ்பேக் உடற்கட்டைக் கொண்டுவர முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன, ஆனால் இதை நம்பலாமா வேண்டாமா என்ற யோசனையில் உள்ளனர் ரசிகர்கள்.

சிம்பு, முஃப்தி , மகா முஃப்தி , மாநாடு, ஞானவேல்ராஜா, simbu, mufti, drop, சுரேஷ் காமாட்சி, வெங்கட் பிரபு.