ஒரே மாதத்திலேயே எடுக்கப்படும் சிம்புவின் படம்! அதிர்ச்சியில் திரையுலகம்!

Photo of author

By Parthipan K

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பன்முகத்திறமையினால் முன்னணி கதாநாயகனாக விளங்குபவர் நடிகர் சிம்பு.

இவர் தற்போது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் முப்பதே நாளில்  ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

படம் எடுத்து முடித்த அடுத்த 60 நாட்களில் போஸ்ட் புரோடக்சன் வேலைகள் நடைபெற்று வரும் ஜனவரி மாதத்திலேயே படம் ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு முடிவெடுத்துள்ளது.

சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் சிம்புவின் சம்பளத்தை தவிர 2 கோடி மட்டுமே படத்திற்காக செலவு செய்ய உள்ளதாக தெரிகிறது.

ஒரு படத்தை எப்படி 30 நாட்களில் முடித்து முடியும் என்ற திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.