10 கோடியைத் தாண்டியது சிம்புவின் சம்பளம்! ஸ்கிரிப்டோடு கௌதம் மேனன்!

Photo of author

By Parthipan K

10 கோடியைத் தாண்டியது சிம்புவின் சம்பளம்! ஸ்கிரிப்டோடு கௌதம் மேனன்!

சிம்பு இதுவரை பல படங்களில் நடித்து வருகிறார் இப்போது புதிதாகக் கூட ஈஸ்வரன் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.மறுபடியும் புதிதாக ஒரு படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.சிம்பு மற்றும் கௌதம் மேனன் மூன்றாவது முறையாக இணையும் “நதிகளிலே நீராடும் சூரியன்” என்னும் படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கிறது.

சிம்பு மற்றும் கௌதம் மேனனின் முந்தைய இரண்டு  திரைப்படங்களுக்கும் இசையமைத்த ஏ.ஆர் ரகுமான் இந்த திரைப்படத்திற்கும் இசை அமைத்திருக்கிறார். கௌதம் மேனன் என்றாலே சூட்டிங் போகப்போகத்தான் கதை எழுதுவார், முழு ஸ்கிரிப்டோடும் வரமாட்டார் என்கிற விமர்சனத்தை “நதிகளிலே நீராடும் சூரியன்” திரைப்படத்தில் தெரியப்படுத்தியிருக்கிறார் கௌதம் மேனன்.

முதல் முறையாக பவுண்டடு ஸ்கிர்ப்ட் ஷூட்டிங்குக்கு தயாராக இருக்கிறார் ஐசரி கணேஷ். கௌதம் மேனன் பார்முலா(Formula) படி காதல்+ஆக்க்ஷன் கலந்த திரைப்படம் தான் “நதிகளிலே நீராடும் சூரியன்” இந்த படத்துக்காக முதல்முறையாக சிம்பு தனது கரியரில் பத்து கோடி சம்பளத்தைத் தாண்டி இருக்கிறார். லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் இத்திரைப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை நடக்கவிருக்கிறது.அதில் சிம்புவிற்கு ஒரு மாதத்திற்கு 5 கோடியாம் அப்பொழுது இரண்டு மாதத்திற்கு சிம்புவின் சம்பளம் 10 கோடி என்பது தெரிவிக்கப்படுகிறது.