குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள் – 2021  சிம்மம்  

Photo of author

By Anand

குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள் – 2021  சிம்மம்  

மகரத்தில் இருந்து அதிசாரமாக கும்ப ராசிக்கு சென்றுள்ள குரு பகவான் 21 – 6 – 2021 அன்று வக்கிரம் ஆகி,   18 – 10 2021 அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார்.

அதேபோல் கடந்த 23-5-2021 அன்று மகரத்தில் வக்ரம் ஆன சனி பகவான்,   11-10-2021  அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார்.

எனவே, குரு மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களின் வக்ர கதியை கணக்கில் கொண்டே, ஒவ்வொரு ராசிக்கும் பலன்களை அறிய வேண்டும்.

அந்த வகையில், சிம்ம ராசிக்கு ஏழாம் இடமான கும்பத்திற்கு அதிசாரமாக சென்றுள்ள குரு தற்போது வக்கிரம் அடைந்துள்ளார்.

பொதுவாக ஏழாம் இடத்தில் உள்ள குரு தொடர்ந்து நல்ல பலன்களை தந்து கொண்டு இருப்பார். அதனால், நண்பர்கள் மற்றும் தொழில் பங்குதாரர்களுடன் நல்ல இணக்கமான உறவு நீடிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பொது வாழ்க்கையில் மன நிறைவு கிடைக்கும். எதிர்பார்த்த பயணங்கள் தடையின்றி செல்லும்.

தற்போது, ஏழாம் இடத்தில் உள்ள குரு வக்கிரம் அடைவதால், ஏற்கனவே நீடிக்கும் இணக்கமற்ற போக்கு மாற்றத்திற்கு வரும். பொது வாழ்க்கையின் இடையூறுகளை சந்தித்தவர்கள், மீண்டும் நல்ல மதிப்பை பெறுவார்கள்.

தடைபட்ட பயணங்கள் மீண்டும் தொடங்கும். கூட்டு தொழில்களில் லாபம் கிடைக்கும். தொழில் ரீதியான புதிய நட்புகள் அறிமுகமாகும்.

குருவின் ஐந்தாம் பார்வை, பதினொன்றாம் வீட்டின் மீது விழுவதால், வரவேண்டிய பணங்கள் வந்து சேரும். முடங்கி இருந்த தொழில் லாபங்கள் கைக்கு வந்து சேரும்.

மூத்த சகோதர சகோதரிகளின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வயதில் மூத்த நண்பர்களின் நல்ல ஆலோசனைகளும், பண உதவிகளும் கிடைக்க வாய்ப்புக்கள் உருவாகும்.

நீண்டநாள் நிறைவேறாமல் இருந்த ஆசைகள் நிறைவேறும். புதிதாக வாங்க நினைத்த பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள். மன மகிழ்ச்சி இரட்டிப்பாகும். வீட்டில் தடைபட்ட திருமணங்கள் நடக்க தொடங்கும்.

குருவின் ஏழாம் பார்வை ராசியின் மீதே விழுவதால், முகம் பொலிவு பெரும். புதிய தன்னம்பிக்கை பிறக்கும். இதுவரை அதை நடக்கவில்லை என்றால், வக்கிர குரு அதை நடத்திக் கொடுப்பார்.

குருவின் ஒன்பதாம் பார்வை, ராசியின் மூன்றாம் வீட்டின் மீது விழுவதால், இழந்த தைரியம் மீண்டும் கிடைக்கும். தடைபட்ட முயற்சிகள் வெற்றிகரமாக தொடங்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய வணிக வாய்ப்புகள் கிடைக்கும்.

வக்கிர குருவை போல, வக்கிர சனியின் பலன்களை அறிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

அதன்படி, சிம்ம ராசிக்கு ஆறாம் இடத்தில் இருந்த சனி பகவான், கடன், நோய், வழக்கு போன்றவற்றை முடிவுக்கு கொண்டு வந்திருப்பார்.

அப்படிப்பட்ட பலன்கள் இதுவரை நடைபெறவில்லை என்றால், இந்த வக்கிர காலத்தில் இவை அனைத்தும் நல்லபடியாக அமையும்.

போட்டிகள், பொறாமைகள் நிறைந்த மனிதர்கள், உங்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் அனைவரும் அடங்கி போகும் சூழல் ஏற்படும்.

அமைப்பு சார்ந்த தேர்தல்களில் பலர் வெற்றி பெற்று புதிய பொறுப்புக்களை ஏற்க வேண்டி வரும். அதேபோல், சிலர் ஏற்கனவே வகித்த பொறுப்புக்களை விட்டு விலகும் நிலையும் ஏற்படும்.

சனியின் மூன்றாம் பார்வை, ராசிக்கு எட்டாம் இடத்தில் விழுவதால், நீண்டகால நோய்கள், வழக்குகள், கடன்கள் போன்றவை முடிவுக்கு வரும். இதுவரை, அது நடக்கவில்லை என்றால், வக்கிர சனி அதை சிறப்பாக முடித்து வைப்பார்.

பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள், பாகப்பிரிவினையில் உள்ள தடங்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். ஏற்கனவே, இவை இழுபறியாக இருந்தால், வக்கிர சனியின் காலத்தில் முடிவுக்கு வரும்.

சிலருக்கு எதிர்பாராத வகையில், தன வரவுகளும் கிடைக்கும். குறிப்பாக மறைமுக வருவாய் அதிகரிக்கும்.

சனியின் ஏழாம் பார்வை, ராசிக்கு பனிரண்டாம் வீட்டின் மீது விழுவதால், சேமிப்பை புதிய தொழில்கள் அல்லது திட்டங்களில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் ஏற்படும்.

சேமிப்பு கரைவதை சுப விரயங்களாக மாற்றிக்கொள்வது நன்மை பயக்கும். யாராவது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தால், அவர்கள் உடல்நலம் தேறி வீட்டுக்கு திரும்புவார்கள்.

இதுவரை தடைபட்ட வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணங்கள், இனி தடையின்றி மேற்கொள்வதற்கு வாய்ப்புகள் உருவாகும்.

அதேபோல், சனியின் பத்தாம் பார்வை, ராசிக்கு மூன்றாம் வீட்டின் மீது விழுவதால், இதுவரை தடைபட்ட ஒப்பந்தங்கள் இனி கையெழுத்தாகும்.

தடைபட்ட முயற்சிகள் வெற்றிகரமாக தொடங்கலாம். எழுத்து துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இளைய சகோதர சகோதரிகளிடம் இருந்த மனக்கசப்பு மாறும்.

ராசிக்கு பத்தாம் இடத்தில் இருக்கும் ராகு, தொழில் ரீதியான இடையூறுகளை அகற்றி, நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி தருவார். தொழில் வளம் சிறப்பாக அமையவும் வழி வகுப்பார்.

எனினும் தொழில் ரீதியாக மற்றவர்கள் சொல்லும் ஆலோசனையையும் கொஞ்சம் காது கொடுத்து கேட்பது நல்லது.

அதேசமயம், நான்காம் இடத்தில் இருக்கும் கேது தொடர்ந்து மன சஞ்சலங்களை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார். வீட்டில் செலவிடும் நேரத்தை விட, தொழிலில் அதிக நேரம் செலவிடுவது நல்லது.

நல்ல ருசியான உணவு, சுகமான உறக்கம், சொகுசான வாகனம் போன்றவற்றை அனுபவிக்க இது உகந்த காலமாக இருக்காது. பிற்காலத்தில் இந்த நிலை மாறும். அதுவரை சற்று பொறுமையுடன் இருப்பது அவசியம்.

இதுவரை, கோச்சார  குரு மற்றும் சனியால் பாதிப்புகளை சந்தித்து இருந்தால், அது வக்கிர குரு மற்றும் வக்கிர சனியால், முடிவுக்கு வரும். அதனால், கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

பொதுவாக, ஒருவரது ஜென்ம ஜாதகத்தில் வக்கிரமாக இருக்கும் கிரகம்,  கோச்சாரத்தில் வக்ரம் ஆகும்போது, அந்த ஜாதகருக்கு, நல்ல பலன்களை தரும் என்பது ஜோதிட விதியாகும்.

ஜென்ம ஜாதகத்தில் வக்கிரம் அடையாத கிரகங்கள், கோச்சாரத்தில் வக்கிரம் அடையும்போது, பெரிய அளவில், நல்ல பலன்களை தருவதில்லை.

எனவே, வக்கிர குரு மற்றும் வக்கிர சனியின் பலன்கள் அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தை பொறுத்து மாறுபடும்.

மற்ற ராசிகள்:

குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021  மேஷம்

குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021  ரிஷபம்

குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021  மிதுனம்

குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021  கடகம்

குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021  கன்னி

குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021  துலாம்

குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021  விருச்சிகம்

குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021  தனுசு

குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021  மகரம்

குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021   கும்பம்

குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள் – 2021  மீனம்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வக்கிர குரு மற்றும் வக்கிர சனியின் முழு பலன்களை காண கீழுள்ள வீடியோ பதிவை கிளிக் செய்து பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=ZdJlicZmZn4