தொப்பையை குறைக்க எளிய இயற்கை உணவு முறைகள்!!

0
232

ஆண்கள் ஆகட்டும் பெண்களாகட்டும் இருபாலருக்கும் இருக்கக்கூடிய ஒரே பொதுவான பிரச்சனை இந்த தொப்பையை குறைப்பது எவ்வாறு என்று.

தற்போது பெரும்பாலான மக்கள் கணினி சார்ந்த வேலைகளை அதிகம் செய்வதால் அவர்களுக்கு உடற்பயிற்சி என்பது குறைவாகவே உள்ளது. இதனாலேயே உடல்பருமன் தொப்பை போடுதல் போன்ற பிரச்சனைக்கு ஆளாகி வருகின்றனர்.

வேலை மட்டுமின்றி நமது உணவு முறைகளும் நமது உடல் பருமனுக்கு காரணமாகிறது.அதிகம் ஃபாஸ்ட் புட் உணவு பொருட்களை உட்கொள்ளுவதால் கிடுகிடுவென கொழுப்புகள் கூடி தொப்பை போடுகிறது. இது மட்டுமன்றி உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளும் வர காரணமாக அமைகின்றன.

உடல் பருமனை குறைக்கஉடற்பயிற்சியும் மட்டுமின்றி சில உணவுப் பொருட்களும் உதவி செய்யும்.அந்த உணவுப் பொருட்கள் மற்றும் அதை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்பதனைப் பற்றி இந்த பகுதியில் காணலாம்.

சிறிதளவு தேனை மிதமான சுடுநீரில் கலந்து விடியற்காலை வேளையில் இரண்டு மாதங்கள் வீதம் குடித்து வருகையில் வயிற்றில் உள்ள கூடுதல் கொழுப்பை குறைத்து உடல் இளைக்க வழிச் செய்யும்.

இஞ்சி சாற்றில் சிறிதளவு தேன் விட்டு சூடுபடுத்தி ஆறவைத்துக் கொள்ளவேண்டும். காலை உணவுக்கு முன்பும் மாலையிலும் ஒரு ஸ்பூன் அளவு உட்கொண்டு, வெந்நீர் பருகி வந்தால் 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.

எலுமிச்சை ஜூஸில் சர்க்கரைக்கு பதில் தேன் கலந்து பருகி வந்தால் வயிற்றிலுள்ள தொப்பை குறைந்து உடல் இளைக்கும்.

உடல் பருமன் குறைய வயிற்றில் உள்ள கொழுப்பு குறைய உணவில் அடிக்கடி கொள்ளு சேர்க்க வேண்டும்.

வாழைத் தண்டு சாறு ,பூசணி சாறு, அருகம்புல் சாறு, கற்றாழை சாறு, இம்நான்கில் ஏதாவது ஒன்றை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறைந்து உடல் கட்டமைப்பு பெறும்.

முருங்கைப் பூக்களை பசும்பாலில் போட்டு காய்ச்சி 41 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் உடல் கட்டமைப்பு பெறும்.

Previous articleகாலை எழுந்தவுடன் உள்ளங்கையில் விழிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
Next articleகண்ணின் கருவளையங்களைப் போக்க எளிய வழிமுறைகள்