பெரும்பாலோனோருக்கு முகம் முழுவதும் பளிச்சென்று இருக்கும். ஆனால் இரு கண்ணின் கீழ்ப் பகுதியில் கருப்பாக வளையம் போன்ற அமைப்பு இருக்கும்.இந்த கருவளையத்திற்கு காரணம் சரியான தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளே காரணம்.
கருவளையத்தை போக்க நிறைய பேர் சிரமப்படுவர். அதுமட்டுமின்றி இதற்காக நிறைய செலவு செய்தும் பலன் கிடைக்காமல் வருந்துவர். இந்த கருவளையத்தை சரி செய்ய இயற்கையான சில எளிய வழிமுறைகளை பற்றி காண்போம்.
கற்றாழைச் சாறு
கற்றாழையில் இருந்து எடுக்கப்பட்ட
ஜெல்லை கொண்டு கண்களின் சுற்றி மசாஜ் செய்ய வேண்டும்.பின்னர் பத்து முதல் பதினைந்து நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.இப்படி செய்து வருகையில் கண்கள் மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதியில் வறட்சி தன்மையை நீக்கி கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தை மறைக்க உதவும்.
புதினா இலைகள்
இதில் விட்டமின் சி உள்ளதனால் இது இயற்கையாகவே கண்களுக்கு குளிர்ச்சி தரும். புதினா இலையில் நீர் விட்டு நன்றாக அரைத்து பேஸ்டாக முகத்தில் தடவி ,சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ கருவளையங்கள் நீங்கும்.
மஞ்சள்
இதில் முகப்பொலிவு ஏஜென்ட் நிறைய உள்ளது. இதனை தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கண்களை சுற்றி தடவ வேண்டும்.பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும்.இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர முகத்தில் உள்ள கருவளையங்கள் நீங்கும்.
உருளைகிழங்கு
இது ப்ளீச்சிங் (bleaching) பண்பு கொண்டது.கண்களை சுற்றி உள்ள வீக்கத்தை குறைக்கும். இரவில் தூங்கும் முன் இதைனை சிறிய துண்டாக வெட்டி முகத்தில் வைத்து தூங்க காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தை நன்றாக கழுவி வர கண்ணின் வறட்சித் தன்மை நீங்கும், கரு வளையமும் மறையத் துவங்கும்.