சருமத்தில் உள்ள மருக்களை நீக்க எளிய வழி

Photo of author

By Kowsalya

சருமத்தில் உள்ள மருக்களை நீக்க எளிய வழி

சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு மருக்கள் இருக்கும். இந்த மருக்கள் பார்ப்பதற்கு உன்னி போல் இருக்கும். ஆனால் இவை அழகை கெடுப்பது போல் இருக்கும். மேலும் இந்த மருக்கள் உருவாவதற்கு காரணம், கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து, சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும்.

பொதுவாக இத்தகைய மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பகங்களுக்கு கீழே, முதுகு போன்ற பகுதிகளில் வரும். இவை அழகைக் கெடுக்குமாறு இருப்பதால், இதனை போக்க முயற்சிக்கலாம்.

இதனை பயன்படுத்தினால் ஒரே நாளில் உதிர்ந்து போய் தழும்புகள் மறைந்து விடும்.

தேவையான பொருட்கள்:
1. நாயுருவி இலை ஒரு கைப்பிடி
2. சுண்ணாம்பு சுண்டைக்காய் அளவு
3. துணி சோடா குண்டுமணி அளவு.

செய்முறை:
1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளவும். அல்லது அம்மிக்கல்லில் கூட அரைக்கலாம்.
2. ஒரு கைப்பிடி அளவு நாயுருவி இலைகளை எடுத்து மிக்ஸியில் போட்டுக் கொள்ளவும்.
3. பின் சுண்டைக்காய் அளவு சுண்ணாம்பை சேர்த்து கொள்ளவும்.
4. இரண்டு குண்டு மணி அளவு துணி சோடா அதாவது வாஷிங் சோடா வே சேர்த்துக் கொள்ளவும்.
5. மூன்றையும் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
6. இதை தோல் மீது படாமல் மருக்கள் மீது மட்டும் வைத்து வர வேண்டும்.
7. இவ்வாறு ஒரு வாரம் முழுக்க செய்து வர மருகல் தானாக உதிர்ந்து விடும்.