சிங்கப்பூர் அதிபர் தேர்தல்.. 9வது அதிபராக பதவியேற்கும் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம்!!

Photo of author

By Sakthi

சிங்கப்பூர் அதிபர் தேர்தல்.. 9வது அதிபராக பதவியேற்கும் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம்!!

சிங்கப்பூரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் அவர்கள் அபார வெற்றி பெற்று சிங்கப்பூரின் 9வது அதிபராக பதவியேற்கவுள்ளார்.

தற்பொழுது சிங்கப்பூர் அதிபராக உள்ள ஹலிமா யகூப் அவர்களின் பதவிக்காலம் செப்டம்பர் மாதம் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் சிங்கப்பூர் அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று(செப்டம்பர் 1) நடைபெற்றது. இந்த தேர்தலில் சிங்கப்பூரில் பிறந்த தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் அவர்களும், சீன வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூரில் குடியுரிமை பெற்ற கோக் சாங், டான் கின் லியான் ஆகிய மூன்று பேர் அதிபர் பதவிக்காக போட்டியிட்டனர்.

சிங்கப்பூர் அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று(செப்டம்பர் 1) நடைபெற்ற நிலையில் நேற்று(செப்டம்பர் 1) இரவே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் அவர்கள் 70.4 சதவீதம் வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக கூடிய விரைவில் தர்மன் சண்முக ரத்னம் அவர்கள் பதவி ஏற்கவுள்ளார்.

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கோக் சாங், டான் கின் லியான் ஆகிய இரண்டு வேட்பாளர்களுக்கும் 20 சதவிதத்திற்கும் குறைவான வாக்குகளே கிடைத்து.

கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் மலாய் சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும் என்று கூறப்பட்டது. இதையடுத்து தற்பொழுது அதிபராக உள்ள ஹலிமா யகூப் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.