அதிகரிக்கும் பிசாசு மீன்கள் தொல்லை!!! ஆந்திரா, தெலுங்கானா மீனவர்கள் வேதனை!!!

0
36

அதிகரிக்கும் பிசாசு மீன்கள் தொல்லை!!! ஆந்திரா, தெலுங்கானா மீனவர்கள் வேதனை!!!

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பிசாசு மீன்களின் தொல்லை அதிகரித்து வருவதால் மீனவர்கள் அனைவரும் கவலை அடைந்துள்ளனர்.

டெவில் பிஷ் என்று அழைக்கப்படும் இந்த பிசாசு மீன்கள் தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது. இந்த பிசாசு மீன்களின் முதுகெலும்புகள் மிகவும் பலம் வாய்ந்த எலும்புகள் ஆகும். இந்த பிசாசு மீன்கள் வலையில் சிக்கும் பொழுது முதுகெலும்பை பயன்படுத்தி வலைகளை கிழித்து விடுகின்றது.

அதுமட்டுமில்லாமல் பெரிய வலைகளில் சிக்கும் பிசாசு மீன்களை அகற்றும் பொழுது மீனவர்களுக்கு எளிதாக காயத்தை உண்டாக்குகின்றது. இந்த பிசாசு மீன்களை சாப்பிட முடியாத காரணத்தால் இதை விற்பனை செய்வது கிடையாது. இதற்கு வணிக மதிப்பும் கிடையாது. இந்த பிசாசு மீன்கள் மற்ற நல்ல மீன் இனங்களை பார்த்தால் அப்படியே தின்று அழிக்கும்.

தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட பிசாசு மீன்கள் கடந்த 2016ம் ஆண்டு விஜயவாடா நகரில் உள்ள கிருஷ்ணா நதியில் முதன் முதலில் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து கிருஷ்ணா நதியின் கிளை நதிகளுக்கும் இந்த பிசாசு மீன்கள் பரவத் தொடங்கியது. இந்த பிசாசு மீன்களின் எண்ணிக்கை தற்பொழுது அதிகரித்து இருக்கின்றது.

தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் இந்த பிசாசு மீன்கள் 65 சதவீத நீர்நிலைகளில் காணப்படுகின்றது. இது குறித்து ஆய்வு நடத்திய ஆய்வுக் குழுவினர் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் இந்த பிசாசு மீன்கள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பிசாசு மீன்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள நீர் நிலைகளில் அதிகரித்து வருவதால் நீர்நிலைகளில் இருக்கும் மற்ற 152 வகையான நல்ல மீன் இனங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பிசாசு மீன்கள் சுற்றுப்புற சூழலுக்கும் மீனவர்களுக்கும் கவலையை அளித்துள்ளது.

பெரும் பாதிப்பை அளிக்கும் பிசாசு மீன்களின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக லாகோன்ஸ் ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த பிசாசு மீன்கள் குறித்த எச்சரிக்கையும் பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.