பாடகர் டி. எம். கிருஷ்ணாவிற்கு, எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை தடை செய்யக் கோரிய வழக்கு!!உச்ச நீதிமன்ற தீர்ப்பு!!

Photo of author

By Gayathri

பாடகர் டி. எம். கிருஷ்ணாவிற்கு, எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை தடை செய்யக் கோரிய வழக்கு!!உச்ச நீதிமன்ற தீர்ப்பு!!

Gayathri

Singer D. M. For Krishna, case seeking ban on MS Subbulakshmi Award!!Supreme Court Verdict!!

” டி.எம்.கிருஷ்ணா என்பவர் இந்திய கர்நாடக பாடகர் மற்றும் எழுத்தாளர்” ஆவார். இவர் “ராமன் மகசேசே” எனும் உயரிய விருதை பெற்றுள்ளார். 2024 ஆம் ஆண்டிற்கான உயரிய விருதான ‘சங்கீத கலாநிதி எம். எஸ். சுப்புலட்சுமி’ என்ற விருதை இவருக்கு அளிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ‘இவ்விருதை டி.எம் க்கு தரக்கூடாது என நீதிமன்றத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் வழக்குத் தொடர்ந்தார்’. எனவே விருது வழங்கத் தடை விதிக்கப்பட்டது. இவ்வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது.

“முன்னணி பாடகி எம் எஸ் சுப்புலட்சுமி பேரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், எம்எஸ் சுப்புலட்சுமி அவர்கள் இறக்கும் முன்னரே அவருக்கென்று தனியாக மணிமண்டபம் நிறுவக் கூடாது என்றும், மேலும் அவரது பெயரில் அறக்கட்டளைகள் ஏதும் நடத்தக்கூடாது என்றும் உயில் எழுதி வைத்துள்ளார்” என கூறினர். எனவே, அவரது பெயரில் விருதுகள் வழங்க கூடாது என அவர்கள் தரப்பை முடித்தனர்.

மேல்முறையீட்டு தாரர்கள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், ‘கடந்த பத்து வருடங்களாக எம். எஸ்.சுப்புலட்சுமி விருது வழங்கப்பட்டு வருகிறது’. தற்போது தடை விதிக்க காரணம் என்ன? ‘உயிலானது, சொத்துகளுக்கு மட்டுமே பொருந்தும். விருதுகளுக்கு உயில் ஏற்றுக் கொள்ளப்படாது’ என வாதாடினர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகளும், அவ்வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும் பாடகர் டி.எம். கிருஷ்ணாவிற்கு “சிறந்த கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி” விருது வழங்க இருக்கும் தடையை நீக்கினர்.