சென்னையை பசுமையாக்கும் சிங்கார சென்னை திட்டம்: விரைவில் திறக்கப்பட உள்ள பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானம்! 

0
238

சென்னையை பசுமையாக்கும் சிங்கார சென்னை திட்டம்: விரைவில் திறக்கப்பட உள்ள பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானம்! 

சென்னை மாநகரை பசுமையான நகரமாக மாற்றம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் சிங்கார சென்னை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் நகரின் மேம்பாலங்களின் கீழ் பகுதியில் செடிகள் வளர்க்கின்றனர். பாலத்தின் தூண் பகுதி முழுவதும் செடிகள் படர விடப்பட்டுள்ளது. இதனால் பார்ப்பதற்கு பசுமையாகவும் அழகாகவும் உள்ளது. பாலங்களின் கீழ் பகுதியில் உள்ள இடங்களில் அழகிய செடிகள், மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் பூங்காக்கள் மேம்படுத்துகின்றன. 315 பூங்காக்கள், 91 இடங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைத்து வருகின்றன. கூடிய விரைவில் இந்த பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட உள்ளது. மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து துணை மேயர் மகேஷ்குமார் அவர்கள் கூறியதாவது, சென்னை மாநகரை பசுமையாக மாற்ற வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் முக்கிய நோக்கமாகும். நகரம் முழுவதும் பூங்காக்கள், இளைஞர்களை ஊக்குவிக்க விளையாட்டு மைதானம் போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் மரங்கள் அமைத்து பசுமையான சூழலை உருவாக்க வேண்டும் என்பது முதல்வரின் விருப்பமாகும். பூங்காக்களில் நடைபாதை, சிறுவர்கள் விளையாடும் பகுதி, இருக்கைகள் அமைத்தல், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நடுவில் ஸ்டேஜ் போன்றவையுடன் உருவாக்கப்படுகிறது என இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை நகரில் தேசிய பசுமை கொள்கையின் அடிப்படையில் 33 சதவீதம் நகரம் பசுமை நிறைவுடன் காணப்பட வேண்டும். சென்னையில் தற்போது வரை 15 சதவீதம் மட்டுமே பசுமை நிறைந்த பகுதிகளாக உள்ளன.

Previous articleஆர் எஸ் எஸ் அமைப்பை தமிழக அரசும் திமுகவின் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பதின் உள்நோக்கம் என்ன?
Next articleஇந்து விரோத திமுக அரசு! இந்து மக்கள் கட்சி ஆவேசம்!