இந்த இரண்டு படிப்பிற்கும் ஒரே நுழைவுத் தேர்வு? மத்திய அரசு ஆலோசனை!
தற்போது ஒன்றைய அரசு சில திட்டத்தை பரிசீலித்து வருகிறது. அந்த வகையில் நமது நாட்டில் தற்போது மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒன்றிய அரசு நிதி உதவியுடன் நடைபெறுகிற ஐஐ டி என்ஐ ஐடி குறிப்பிட்ட சில தொழில்நுட்ப நிறுவனங்களிலும் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கு தேர்வுகள் நடத்தப்படுகிறது எனவும் தெரிவித்தனர்.
மேலும் இந்நிலையில் நீட் நுழைவுத் தேர்வுகளையும் தற்போதுள்ள கியூட் என்று அழைக்கப்படுகிற பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வுடன் இணைப்பதற்கான வாய்ப்புள்ளதாக கூறினார்கள். மேலும் ஒன்றிய அரசு அடுத்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த பொது தேர்வினை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
மேலும் தற்போது மூன்று பொது தேர்வுகளை கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்தனர். மேலும் இந்த தேர்வானது நீட் ,ஜே இ இ மெயின் தேர்வு மற்றும் கியூட் தேர்வாகும். இந்த தேர்வு எழுதும் பெரும்பாலான மாணவர்கள் பொதுவானவர்கள் ஆவர். இந்த நீட் மற்றும் இன்ஜினியரிங் படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளை இணைப்பது கூறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகின்றனர்.