Sitharathai benefits: ஒரு சிலருக்கு நீண்ட நாட்களாக வறட்டு இருமல், சளி இவை அனைத்தும் இருக்கும். அதிலும் இந்த நெஞ்சு சளி என்பது எவ்வளவு தான் வைத்தியம் பார்த்தாலும் ஒரு சிலருக்கு அது குணமாகாமல் அப்படியே இருக்கும்.
நுரையீரல் தொற்றினால் உண்டாக கூடிய இந்த சளியை முழுமையாக குணமடைய செய்வது என்பது சற்று கடினமான ஒன்று தான். அதிலும் குழந்தைகளுக்கு இந்த நுரையீரலில் சளி தங்கிவிட்டது என்றால் அதனை குணப்படுத்துவது என்பது கடினமான விஷயமாகும். குழந்தைகளுக்கு ஓயாமல் இருமல், காய்ச்சல், வாந்தி போன்றவை ஏற்பட்டு உடல் நலம் பாதிப்பு ஏற்படும். மேலும் வயதானவர்களுக்கும் இந்த நெஞ்சு சளியால் பெரும் பாதிப்பு ஏற்படும்.
நாம் இந்த பதிவில் நெஞ்சு சளியை முழுமையாக குணப்படுத்தக்கூடிய மருந்து பற்றி (sitharathai benefits in tamil) பார்க்கலாம்.
சித்தரத்தை
இந்த பெயர் பலரும் கேள்விப்பட்டு, ஒரு சிலர் கேள்விப்படாத ஒன்றாக இருக்கும். ஆனால் நம் வீட்டில் உள்ள தாத்தா, பாட்டிக்கு நிச்சயம் இந்த சித்தரத்தை பற்றி தெரிந்திருப்பார்கள். நீண்டநாள் நெஞ்சு சளிக்கு சிறந்த மருத்துவம் என்றால் அது இந்த சித்தரத்தை தான்.
இந்த சித்தரத்தை பொடியை தண்ணீரில் போட்டு சுண்டக் காய்ச்சி வெதுவெதுப்பாக இருக்கும் போது அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் எப்பேற்பட்ட சளியாக இருந்தாலும் மலத்துடன் வெளியேறி விடும்.
இந்த சித்தரத்தை பார்ப்பதற்கு இஞ்சி போன்று தான் இருக்கும். ஏனென்றால் இது இஞ்சி குடும்பத்தை சார்ந்தது. மேலும் இது நாட்டு மருந்து கடைகளில் சித்தரத்தை என்று கேட்டு வாங்கிக்கொள்ளலாம்.
அவர்கள் பட்டையாக இந்த சித்தரத்தை கொடுப்பார்கள். அதனை வாங்கி வந்து உரலில் போட்டு இடித்து பொடியாக்கி அதன்பின் 100 மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து அதனுடன் 1ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம் அல்லது வெறும் சித்தரத்தை நீர் மட்டும் வெதுவெதுப்பாக குடிக்கலாம்.
இவ்வாறு குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு ஒருவேளை என்றும், பெரியவர்களுக்கு காலை, மாலை என்று இதனை கொதிக்க வைத்து குடுக்கலாம்.
இவ்வாறு தினசரி குடிப்பதால் நீண்ட நாள்களாக இருந்து வந்த சளி, இருமல், உடலில் உள்ள கபம் முழுமையாக தீர்ந்துவிடும்.
மேலும் படிக்க: இது புதுசா இருக்கே..!! உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் நீக்க இந்த வெங்காய தோல் டீ ட்ரை பண்ணுங்க..!!