சிவாஜி அவர்களும் கண்ணதாசன் அவர்களும் தமிழ் திரையுலகில் முக்கியமான ஒரு புள்ளிகள். சிவாஜி இல்லை என்றால் தமிழ் திரையுலகமே இல்லை என்ற அளவிற்கு அவர் காட்டிய நடிப்பின் உச்சமே இன்றும் பேசப்படும் ஒரு பொருள்.
கண்ணதாசனின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் மனதை வருடும் வகையிலும் நாட்டுக்கு நல்ல கருத்துக்களை எடுத்து சொல்லும் வகையில் அமையும். அதேபோல் தன் சொந்த பிரச்சினைகளை பாடலாக எழுதும் வகையும் கண்ணதாசனிடம் உண்டு.
சிவாஜி அவர்கள் அப்பொழுது திமுகவில் இருந்த பொழுது நடந்த பெரிய பிரச்சனை காரணமாக கண்ணதாசனுக்கும் சிவாஜிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்பொழுது சிவாஜி திமுகவில் இருந்த காலம். அப்பொழுது சிவாஜியின் படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றது. அவர் வளர்ந்து கொண்டே இருக்கிறார் என்று, திமுகவில் பலரும் பேச இவனை எப்படியாவது திமுக கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று நினைத்திருந்த காலம் அது.
அப்பொழுது இயக்குனர் பீம்சிங் அவர்கள் சிவாஜியை திருப்பதிக்கு அழைத்து சென்றிருக்கிறார். திமுகவோ திராவிட முன்னேற்ற கழகம் பெரியாரின் வழியை பின்பற்றி இருந்த காலகட்டத்தில், சிவாஜி அவர்கள் திருப்பதிக்கு சென்றது மாபெரும் பிரச்சனையாக ஏற்பட்டு, அவரைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது.
அப்பொழுது கண்ணதாசன் அவர்கள் பத்திரிக்கையில் எழுதும் வேலையை கூட செய்து கொண்டிருந்தார். அப்பொழுது தெனாலி ராமன் படத்தில் யானை மிதிக்கும் ஒரு காட்சி இருக்கும். அந்த படத்தை போட்டு இத்துடன் சிவாஜியின் திரைப்பட காலம் முடிந்தது என்று அவர் காட்டமாக எழுதியிருக்கிறார்.
இதைப் பார்த்து சிவாஜி அவருக்கோ என்றைக்காவது, கண்ணதாசனை பார்த்தால் நன்கு பேசி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.
அப்படி ஒரு படபடப்பில் சந்தித்த கண்ணதாசன் சிவாஜிக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அதன் பிறகு என் எஸ் கே கிருஷ்ணன் அவர்கள் விலக்கி விடவே பிரச்சனை சமூகமாக முடிந்தது என்று சொல்லப்படுகிறது. அதன் பின் சிவாஜி படங்களுக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதுவதில்லை.
சிவாஜி அவர்களுக்கு எப்பொழுதும் ஒரு நல்ல எண்ணம் உண்டு திறமை எங்க இருக்கிறதோ , திறமையை பாராட்டிய தவறியது இல்லை, அதேபோல் அந்த திறமையை பயன்படுத்த தவறியதும் இல்லை. அப்படி சிவாஜியும் சிவாஜி நல குழு அவர்களும் பாகப்பிரிவினை படத்திற்கு பாடல்கள் எழுத கண்ணதாசனை அணுகினார்கள். அந்த பாடல்கள் அனைத்தும் பயங்கர ஹிட் ஆனது.
அதன்பின் பாலும் பழமும் என்ற படத்திற்கும் கண்ணதாசன் அவர்கள்தான் பாடல் எழுதுகின்றார். அப்படி அவர் எப்படி எழுதுகிறார் என்பதை பார்க்கவே சிவாஜி அவர்கள் நேராக அங்கு சென்று இருக்கும் பொழுது, இருவரும் எதிரே முதலில் அமர்ந்தனர். அப்பொழுது சிவாஜியவர்கள் கண்ணதாசனை பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார். அதை வைத்து கண்ணதாசன் ஒரு பாடல் எழுதி அது பயங்கர ஹிட்டானது அதுதான் ” என்னை எதை எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் “என்ற பாடல்