இயக்குனரின் தலைகனத்தை அழித்த சிவாஜி!! அதையே படமாக எடுத்து அசத்தல்!!

Photo of author

By Gayathri

நடிகர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு ” நடிகர் திலகம் ” என்று சிறப்பு பெயர் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அதற்கு காரணம் அவருடைய தனிப்பட்ட நடிப்பு திறமை. இப்படி நடிப்பில் அசத்திய அவரிடம் சிலர் நீங்கள் ஏன் இன்னும் திரைப்படங்களை இயக்கத் தொடங்கவில்லை என்று கேட்டிருக்கின்றனர். அதற்கு நடிப்பது என்னுடைய தொழில் அது மட்டுமல்லாது எனக்கு படங்களை இயக்குவதற்கு நேரமில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாது, படத்தினை இயக்குவதையை தொழிலாக செய்து கொண்டிருப்பவர்களை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும். என்னுடைய தொழில் நடிப்பு என்பதால் நான் அதையே செய்து கொண்டிருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார். இவ்வாறாக கூறிய சில காலங்களில், நடிகர் சிவாஜி கணேசனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் இயக்குனர் விஜயன் இயக்கத்தில் ” ரத்த பாசம் ” திரைப்படமானது எடுக்கப்பட்ட வந்திருக்கிறது. அந்த நேரத்தில் விஜயகாந்த் உடைய படமான “தூரத்து இடி முழக்கம்” என்ற திரைப்படத்தையும் இயக்குனர் விஜயன் அவர்கள் இயக்கிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த சமயத்தில் பேட்டி ஒன்றில் இயக்குனர் விஜயன் அவர்கள், ” என்னுடைய இயக்கத்தினால் தான் சிவாஜி கணேசனின் படங்கள் வெற்றி கண்டுள்ளன ” என்று தலைவனத்தோடு பேசியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாது, தூரத்து இடி முழக்கம் படத்தில் வேலை பார்ப்பதால் தான் ரத்த பாசம் திரைப்படத்திற்கு வேலை பார்க்க முடியவில்லை என காரணம் கூட தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். இதனால் கோபமடைந்த சிவாஜி கணேசன் அவர்கள் இயக்குனர் விஜயனை அந்த பதவியில் இருந்து நீக்கி அதோடு மட்டுமல்லாமல் தானே திரைப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார்.

அதன்பின், இயக்குனர் விஜயன் செய்த தவறை உணர்ந்து சிறிது காலத்திற்குப் பின் சிவாஜி கணேசனிடம் வந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார். அவரும் இயக்குனர் விஜயனை மன்னித்து அதன் பின் இருவரும் இணைந்து “பந்தம்” என்னும் திரைப்படத்தை எடுத்துள்ளனர்.

உண்மையில் இயக்குனர் விஜயன் செய்தது போலவே, பந்தம் திரைப்படத்தில் கார் டிரைவர் வேலையை விட்டு சென்றதாகவும் அதன் பின் மீண்டும் வந்து மன்னிப்பு கேட்டு வேலைக்கு சேர்ந்ததாகவும் இந்த திரைப்படத்தில் கதை வசனம் அமைக்கப்பட்டிருக்கும். இதனை கவனித்து பார்த்தவர்கள் அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு.