நடிகர் திலகம் என்ற பட்டத்தை தற்பொழுது வரையில் தன்னகத்தே உரியதாய் வைத்திருக்கக் கூடியவர் நடிகர் சிவாஜி கணேசன். எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக சினிமா துறையில் அதிக அளவு பேசப்பட்டவர் இவரே ஆவார்.
கதாநாயகனிலிருந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிய பொழுதிலிருந்து திரைப்படத்தில் தான் நடிப்பதற்கான சம்பளத்தை இவ்வளவுதான் என சிவாஜி கணேசன் அவர்கள் முடிவு செய்ய மாட்டாராம். அதற்கு மாறாக தயாரிப்பாளர்களே இதற்கான சம்பளம் இவ்வளவுதான் என முடிவு செய்து கொடுப்பதை எந்தவித வாக்குவாதமும் இன்றி பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு மனிதராகவே இவர் விளங்கியிருக்கிறார்.
அதிலும் பல படங்களில் நடித்து முடித்த பின் அந்த திரைப்படம் விற்பனை செய்யப்பட்ட பின்னரே இவருக்கான சம்பளமானது வழங்கப்பட்டிருக்கிறது. முன்கூட்டியே கொடுக்கக்கூடிய தொகையாக இவர் பெறுவது 100 ரூபாய் மட்டுமே என்றும் தகவல்கள் சொல்கின்றன.
இப்படி இருக்கும் சூழலில் படையப்பா திரைப்படத்தில் இவர் நடிக்க ஒப்புக்கொண்ட பொழுது இவருக்கான சம்பளம் எப்பொழுதும் போல் பேசப்படவில்லையாம். தொடர்ந்து படையப்பா திரைப்படம் நடித்து முடித்த பின் அந்த திரைப்படம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பின்னர் படையப்பா திரைப்படத்தின் தயாரிப்பாளர் சிவாஜிகணிடம் காசோலை ஒன்றினை கொடுக்க அவரும் அதைப் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு சென்ற பின் தன்னுடைய மூத்த மகனிடம் கொடுத்திருக்கிறார்.
அதனைப் பார்த்து சிவாஜி கணேசனின் உடைய மூத்த மகன் இதில் 1 கோடி ரூபாய் சம்பளமாக போடப்பட்டுள்ளது என தெரிவிக்கவே, சிவாஜி கணேசன் அவர்கள் உடனடியாக தயாரிப்பாளர் அவர்களுக்கு செல்போன் மூலம் அழைத்து இவ்வாறு தனக்கு காசோலையை மாற்றிக் கொடுத்ததாக தெரிவித்திருக்கிறார். அதற்கு தயாரிப்பாளரும் இது தங்களுக்கான சம்பளம். இதனை ரஜினி அவர்கள் தான் தங்களுக்கு கொடுக்கச் சொன்னார் என்று கூறியதும் சிவாஜி கணேசனின் உடைய கண்கள் கலங்கிவிட்டதாம். ஏனெனில் பொதுவாக படங்களுக்கு 10 லட்சம் அல்லது 20 லட்சம் மட்டுமே அதிகபட்ச சம்பளமாக பெற்றுக் கொண்டிருந்த இவர் படையப்பா திரைப்படத்தில் முழுமையாக இடம் பெறவில்லை என்றாலும் தனக்கு தன்னுடைய வாழ்நாளிலே அதிகப்படியான சம்பளத்தை பெற்றுள்ளோம் என கண்கலங்கினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.