சிவாஜி கணேசனின் பராசக்தி ரீ ரிலீஸ்!! கதி கலங்கிய சிவகார்த்திகேயனின் படக்குழு!!

Photo of author

By Gayathri

சிவாஜி கணேசனின் பராசக்தி ரீ ரிலீஸ்!! கதி கலங்கிய சிவகார்த்திகேயனின் படக்குழு!!

Gayathri

Sivaji Ganesan's Parashakti Re Release!! Sivakarthikeyan's film team is troubled!!

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25 வது படமான பராசக்தி திரைப்படம் பெயர் வெளியிட்டதிலிருந்து கடும் சர்ச்சைக்கு ஆளாகி வருகின்றது. முதலில் விஜய் ஆண்டனி அவர்களின் படத்திற்கு அவரும் இப்பெயரை சூட்டி காலையில் டீசர் வெளியிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து மாலையில் இப்பட டீசர் வெளியிடப்பட்டிருந்தது. பின்னர் இவ்விரு படக்குழுவினரும் இணைந்து பேச்சுவார்த்தை மூலம் விஜய் ஆண்டனியின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பராசக்தி என்ற பெயரை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு அந்த சர்ச்சை சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது.

தற்சமயம் பராசக்தி என்ற டைட்டிலுக்காக மீண்டும் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. பராசக்தி என்ற டைட்டில் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த சிவாஜி கணேசனின் திரைப்படம் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும், இப்படத்தின் மூலம் அவர் சிறந்த நடிப்பை வெளிகாட்டியிருந்தார். தற்பொழுது இந்த டைட்டிலுக்காக நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் அதில் அந்நிறுவனம் குறிப்பிட்டதாவது, எங்களுக்கு முழு உரிமையான பராசக்தி திரைப்படத்தின் டைட்டிலை வேறு யாரும் திரைப்பட தலைப்புக்காக பயன்படுத்தக் கூடாது என்று வெளியிட்டுள்ளது. மேலும், சிவாஜி கணேசனின் பராசக்தி திரைப்படம் வெள்ளிவிழா வருவதையொட்டி நாங்கள் அத்திரைப்படத்தை டிஜிட்டல் முறையில் மேம்படுத்தி வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளது. விரைவில் அந்தப் பணியையும் தொடங்க இருக்கிறோம் என்றும் தகவலை பகிர்ந்துள்ளது.