இந்த படத்தில் முதலில் சிவாஜியை கேட்ட பாலா! வார்த்தையால் கெட்டதா?

0
266
#image_title

நந்தா திரைப்படத்தில் ராஜ்கிரண் கதாபாத்திரத்துக்கு பதிலாக முதன் முதலில் சிவாஜி நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம் பாலா. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை சிவாஜி எதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.

 

நந்தா திரைப்படத்திற்கு பெரியவர் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடிகர் திலகத்தை நடிக்க வேண்டும் என்று பாலா மிகவும் ஆசைப்பட்டு இருக்கிறார். அதற்காக தூது சொல்லி அன்னை இல்லத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

 

உள்ளே நுழைந்த உடன் பாலாவிற்கு பகீரென்று இருந்திருக்கிறது l. ஏனென்றால் அங்கு சிவாஜி சார் மட்டும் ஒரு நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்

சுற்றி யாரும் இல்லை சிங்கத்துடன் தனியாக மாட்டிக் கொண்டேன் என்று சலங்கை ஒலியின் கமல் போல கால் நடுங்கியதாம் பாலாவிற்கு.

 

“வாங்க உட்காருங்கள்” என்று சிவாஜி சொல்ல ,’வேண்டாம்’ என்று மறுத்திருக்கிறார் “பாலா.

உட்காருவதற்குத்தானே சோபா வாங்கி போட்டு இருக்கிறது” உட்காரங்க ! என்று சிவாஜி சொல்லி இருக்கிறார்.

சிவாஜி உடனே “என்ன சாப்பிடுறீங்க டீயா ?காபியா?” என்று கேட்டுள்ளார்.

“இல்ல சார் இப்பதான் சாப்பிட்டு விட்டு வந்தேன்” என்கிறார் பாலா.

“எதையும் சாப்பிடாமல் இருப்பதற்காகவா இவ்வளவு தூரம் வந்தீர்கள்”. சாப்பிடுங்கள் !என்று சொல்ல ‘ டீ ‘என்று சொல்கிறார் பாலா.

 

டீ வருகிறது.

 

சிவாஜி, “ஒனக்குச் சொந்த ஊரு என்னது?’

 

‘நாராயணத் தேவன்பட்டிங்க.’ என்கிறார் பாலா.

 

கண்கள் கபடி ஆட, உதடு குவித்துச் சிரித்தபடி தாடியை வருடினார் சிவாஜி.

 

‘என்ன படம் பண்ணி இருக்க?’என்று சிவாஜி பாலாவிடம் கேட்க

‘ ‘சேது’ன்னு ஒரு படம்.’ என்கிறார் பாலா.

 

‘ஆங்… ச்சொன்னாய்ங்க… ச்சொன்னாய்ங்க…’ என்றார் ராகம் போட்டு. சொல்கிறார் சிவாஜி.

 

‘சொல்லுங்க டைரக்டர் சார்… உங்களுக்கு நான் என்ன செய்யணும்?’

 

‘ஒரு படம் பண்றேன்ங்க. அதுல நீங்க நடிக்கணும்.’

 

‘என்னவா நடிக்கணும்?’

 

இதில் ஒரு பெரியவர் கேரக்டர். சேதுபதி ராஜவம்சம் அனாதையாக ஒரு பையன் இவனிடத்தில் வந்து சேருகிறார். ஊரில் நிறைய அக்கிரமங்கள் நடக்கிறது இந்தப் பையன் அனைத்தையும் எதிர்த்து சண்டையிட்டு போராடி வெல்கிறான். பழி வாங்க வர்ற வில்லனுங்க உங்களைப் போட்றா னுங்க… அப்பிடி ஒரு லைன்யா’- என உளறி கொட்டுகிறார் பாலா.

 

கொன்ற முடியுமா? அவிய்ங்க என்னை நாலஞ்சு வெட்டு வெட்டுனா, நான் ஒரே வெட்டாச்சும் வெட்ட மாட்டேனா… ம்ம்ம்ம்…’ – மீசையை முறுக்கி சிவாஜி எழ, வசமாக சிக்கியதாக எண்ணுகிறார் பாலா

 

 

‘இல்ல, பில்ட்-அப்லாம் இருக்கு சார், அது பண்ணிரலாம்.’

 

‘என்னாது… பில்ட்-அப்பா? ஓஹோஹோஹோ, போய் நல்லா பில்ட்-அப் பண்ணுங்க, ம்ம்ம்… நான் சொல்றேன் சரியாப்பு!’ எனக் கை கூப்பினார். அப்படியே ‘வசந்த மாளிகை’ சிவாஜி சிரிப்பு.

 

வெளியே வந்து கூட அந்த பதற்றம் போகாமல், மூலையில் இருக்கும் ஒரு பெட்டிக்கடையில் சிகரெட்டை வாங்கி பத்த வைத்திருக்கிறார் . ஒருவேளை வீட்டில் இருந்து சிவாஜி பார்த்தால் என்ன ஆவது? என்று சொல்லி சிகரெட்டை கீழே போட்டுவிட்டு நடந்து போயிருக்கிறார் பாலா.

 

நல்ல திறமையான இயக்குனர் தான்

ஆனால் ஒருவேளை அவர் சொன்ன கதையின் விதம் சிவாஜிக்கு பிடிக்காமல் இருந்த

தால் அதில் நடிக்கவில்லை என்று தெரியவில்லை.

Previous articleஇபிஎஸ் – ஓபிஎஸ் கனவில் கூட ஒன்றிணைய மாட்டார்கள்: மாஜி அமைச்சர் பேச்சு!
Next articleபருவமழைக்கு குட் பாய் சொல்லும் நாள் வந்துவிட்டது மக்களே!