திரையுலகில் சிவாஜி கமல் மட்டுமே நடிகர்கள்! சிவகுமாரின் பகீர் பேட்டி! 

0
154

திரையுலகில் சிவாஜி கமல் மட்டுமே நடிகர்கள்! சிவகுமாரின் பகீர் பேட்டி!

திரைத்துறையில் சிவாஜி மற்றும் கமல்ஹாசனை மட்டுமே தான் சிறந்த நடிகராக  ஏற்றுக்கொள்வதாக சிவக்குமார் பேசியுள்ளார்.

திருக்குறள் 100 வள்ளுவர்  வழியில் வாழ்ந்தவர்கள்,  வரலாற்றுடன் குரல் என்னும் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நடைபெற்றது. அதில் பேசிய சிவக்குமார் நான் 1965இல் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகளாக படங்களில் நடித்துள்ளேன். நாடகங்கள், சின்ன துறையிலும் நடித்துள்ளேன். 2005 ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி என்னுடைய 64வது வயதில் இனிமேல் மேக்கப் போட்டு நடிக்க மாட்டேன் என உறுதி எடுத்துக் கொண்டேன். நான் ஏழு ஆண்டுகளாக ஓவியம் வரைந்துள்ளேன் அதை இந்த பிறவி முழுவதும் வரைய முடியாது.

நான் நடிகர் தான் என்றாலும் பெரிய நடிகர் எல்லாம் கிடையாது. நான் சிறந்த நடிகர்களாக ஏற்றுக் கொண்டது சிவாஜி கணேசன் மற்றும் கமலைத் தான். வேறு யாரையும் அந்த லிஸ்டில் நான் வைக்கவில்லை. திறமை இருக்கிறது. அதற்கு ஏற்றார்போல் அவரவர் திறமையை வெளிப்படுத்துகின்றனர். நான் அவர்களின் திறமையை குறை சொல்லவில்லை. நான் ஏற்றுக்கொண்ட நடிகர்களை பற்றி மட்டும் கூறுகிறேன்.

நானே நடிகர் தான் என்றாலும் இதுவரை 195 படங்களில் நடித்திருந்தாலும் என்னை நல்ல நடிகர் லிஸ்டில் நான் வைத்தது கிடையாது. எனது பெயர் புகழ் எல்லாமே சினிமாவின் மூலம் தான் கிடைத்தது என்றாலும் நான் சினிமாவில் பெரிதாக சாதித்து விட்டேன் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. எதிர் காலத்தில் என்னுடைய அடையாளமாக இருக்கப் போகிறவை என்னுடைய ஓவியங்களும் நான் பேசிக் கொண்டிருக்கும் திருக்குறள், மகாபாரதம்,சிலப்பதிகாரம் போன்றவையும் தான்.

மேலும் சினிமாவை பார்க்கும் மக்களுக்கு இந்த திருக்குறள் விளக்கம் புது அனுபவமாக இருக்கலாம். இந்த திருக்குறள் விளக்கம் போன்று இதுவரை யாரும் செய்ததில்லை என கூறிக் கொண்டிருக்கிறார்கள்.  சினிமாவில் நடித்த நிறைவைவிட வரைந்த ஓவியங்களும் என் பேச்சும் தான் என்றும் என் மனதில் நிறைவைத் தரும்.   சிலப்பதிகாரத்திலும் எனக்கு நிறைய கேள்விகள் உண்டு! கோவலனுக்காக மதுரையை எரித்தாள் கண்ணகி!  அவன் என்ன அவ்வளவு உத்தமனா? மன்னர் செய்த தவறுக்கு மதுரை என்ன பாவம் செய்தது. இதற்கான குழப்பங்கள் தீரும்வரை நான் சிலப்பதிகாரம் பற்றி பேசப்போவதில்லை! என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

Previous articleமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து! இந்த மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்கப்படுமா??
Next articleபொங்கல் பரிசாக இவர்களுக்கு ஊதிய உயர்வு? முதல்வர் கொடுத்த வாக்குறுதி!