தனது இறுதி நாட்களில் கலைபுலி தாணுவிடம் உருகிய சிவாஜி! எம்ஜிஆர் வாங்கிய பெயரை நான் வாங்கவில்லை

Photo of author

By Vijay

தனது இறுதி நாட்களில் கலைபுலி தாணுவிடம் உருகிய சிவாஜி! எம்ஜிஆர் வாங்கிய பெயரை நான் வாங்கவில்லை

நடிகர் திலகம் என்று அனைவராலும் போற்றப்படுபவர் சிவாஜி கணேசன் அவர்கள். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை. இவர் முதலில் அறிமுகமான திரைப்படம் பராசக்தி இதில் அவர் வேலை இல்லா பட்டதாரி போலும் தன் தங்கையை கொன்ற கொலைகாரனை கொன்ற குற்றவாளியாகவும் நடித்திருப்பார்.

அதில் அவர் பேசும் வசனங்கள் அனைத்தும் இன்றளவும் பேசப்படும். மன்னர் முதல் கூலி தொழிலாளி வரை அனைத்து வேடங்களில் நடித்துள்ளார். இவரை நடிப்பின் பல்கலைகழகம் என்றும் அழைப்பார்கள்.

இவர் நடித்த திரைப்படங்களில் கர்ணன்,பராசக்தி,வசந்த மாளிகை,பாசமலர்,தேவர்மகன்,முதல் மரியாதையை, குரத்திமகன், படையப்பா போன்ற படங்கள் இன்றளவும் பேசபடுகிறது.நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடிப்பார்.இவரது மகன் பிரபுவும் முன்னணி நடிகராக வலம் வந்தார்.மேலும் சிவாஜி கடைசியாக நடித்த படம் படையப்பா ஆகும்.

திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவும் சிவாஜியும் நல்ல நண்பர்கள். இவர் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். இப்படி இருக்கையில் தாணு அவர்களை சிவாஜி ஒரு முறை விருந்திற்கு அழைத்துள்ளார். அப்போது அவர் வீட்டிற்கு வந்தபோது அவரிடம் மனம் வருந்தியதாகவும் தாணு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

அப்போது அவர் தன்னுடைய பேத்தியின் கணவர் சுதாகர் அவர்கள் சிறையில் இருப்பதையும், இதனால் தனது குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டதையும். தனது பேத்தியும் குடும்பமும் மிகுந்த கவலையில் இருப்பதாக தெரிவித்ததாக கூறியுள்ளார்.

ஆனால் என் அண்ணன் எம்ஜிஆர் அவர்கள் நல்ல மனிதர் என்ற பெயருடன் இயற்கையை எய்தினார். ஆனால் நான் என்ன செய்வேன் என்று புலம்பியதாகவும். அதன் பின் அடுத்த 15 நாட்களில் இறந்துவிட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.