நடிகராக திரை உலகில் சாதித்துக் காட்டிய சிவாஜி அவர்கள் சிவாஜி பிலிம் சென்று தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் உருவாக்கி அதன் மூலம் நல்ல படங்களுக்கு தயாரிப்பாளராகவும் விளங்கியிருக்கிறார். இப்படிப்பட்ட சிவாஜி கணேசன் அவர்களுக்கு கண்ணதாசன் அவர்கள் பல படங்களில் வெற்றி பாடல்களை கொடுத்திருக்கிறார். எனினும் சிவாஜி பிலிம் தயாரிப்பில் சிவாஜி நடிப்பில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஒன்றிற்கு சிவாஜி கேட்டது போன்ற பாடலை கண்ணதாசனால் எழுதிக் கொடுக்க முடியவில்லை என்ற கோபத்தில் தன்னுடைய சட்டைகளை கிழித்துக்கொண்டு சுவரில் சிவாஜி அவர்கள் முட்டிக்கொண்ட சம்பவம் நடந்திருக்கிறது.
சேஷ் அன்கா என்ற வங்காள மொழி திரைப்படத்தை தழுவிய புதிய பறவை என்ற திரைப்படத்தின் பொழுது நடந்த ஒரு சம்பவம் குறித்து youtube சேனலில் பதிவு செய்திருக்கின்றனர். அதன்படி, படத்தினுடைய கதை சூழலை விளக்கி கண்ணதாசனிடம் சிவாஜி அவர்கள் பாடல் கேட்க கண்ணதாசனும் எழுதிக் கொடுத்திருக்கிறார். ஆனால் அதில் திருப்தி அடையாத சிவாஜி அவர்கள் அந்த காட்சிகளை கண்ணதாசன் முன்னே நடித்து காட்டி இருக்கிறார்.
நடித்துக் காட்டியும் கண்ணதாசன் எழுதிக் கொடுத்த பாடலில் திருப்தி அடையாத சிவாஜி அவர்கள் கோபமடைந்து தன்னுடைய சட்டைகளை கிழித்துக்கொண்டு சுவற்றில் முட்டியவாறு ஒரு வார்த்தை ஒன்றை தெரிவித்திருக்கிறார். அந்த ஒற்றை வார்த்தையை பிடித்துக் கொண்ட கண்ணதாசன் அவர்கள் அதனையே பாடல் வரிகளாக மாற்றி அமைத்திருக்கிறார்.
அந்த பாடல் தான் இன்றுவரை நம் அனைவரின் மனதிலும் குடி கொண்டிருக்கக் கூடிய ” எங்கே நிம்மதி ” இந்த பாடலுக்கு இப்படி ஒரு வரலாறு இருக்கிறது என்பது சுவாரசியமான தகவலாக உள்ளது.