ஒன்லைன் நல்லா இருந்துச்சு… ஆனா இப்போ…? இயக்குனருக்கு கரெக்‌ஷன் கொடுத்த சிவகார்த்திகேயன்!

Photo of author

By Vinoth

ஒன்லைன் நல்லா இருந்துச்சு… ஆனா இப்போ…? இயக்குனருக்கு கரெக்‌ஷன் கொடுத்த சிவகார்த்திகேயன்!

Vinoth

ஒன்லைன் நல்லா இருந்துச்சு… ஆனா இப்போ…? இயக்குனருக்கு கரெக்‌ஷன் கொடுத்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் மண்டேலா படத்தின் இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வருபவர். நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். சினிமாவில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் நட்சத்திர நடிகராக உருவாகியுள்ள அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ஆரம்ப காலக்கட்டத்தில் மெரினா, மனங்கொத்திப்பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படங்களில் நடித்த இவருக்கு 2013 ஆம் ஆண்டு வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனைப் படமாக அமைந்தது.இந்த படம் பட்டித்தொட்டி கிராமங்களில் எல்லாம் சிவகார்த்திகேயனை கொண்டு போய் சேர்த்தது என்றே சொல்லலாம்.

அதையடுத்து அவர் நடித்த டாக்டர், டான் மற்றும் எங்க வீட்டுப்பிள்ளை ஆகிய திரைப்படங்கள் அவரை மேலும் உயர்த்தியுள்ளன. இப்போது அயலான் மற்றும் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் அவர் கைவசம் உள்ளன. இந்நிலையில் மண்டேலா படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

இதற்காக அஸ்வின் சொன்ன ஒருவரிக்கதை சிவகார்த்திகேயனுக்குப் பிடித்து போகவே அடுத்த கட்ட வேலைகள் நடந்துவந்தன. ஆனால் இப்போது இயக்குனர் முழு திரைக்கதையை கொடுத்தபோது அதில் ஏகப்பட்ட கரெக்‌ஷன்களை சிவகார்த்திகேயன் கூறி மாற்றிவரும் படி கூறியுள்ளாராம். இதனால் இந்த படம் சில மாதங்கள் தாமதமாகும் என சொல்லப்படுகிறது.