சிவகார்த்திகேயனின் டிசம்பர் ஹாட்ரிக் !!!

Photo of author

By Parthipan K

சிவகார்த்திகேயனின் டிசம்பர் ஹாட்ரிக் !!!

Parthipan K

தொடர்ந்து மூன்று வருடங்கள் டிசமபர் மாத இறுதியில் தனது  படத்தை வெளியிட்டு, அதையும் வெற்றிப்படமாக்கி ஹாட்ரிக் அடித்துள்ளார் சிவ கார்த்திகேயன்.

ஒரு வெற்றி படத்திற்கான அனைத்து அம்சங்களும் சரிவர அமைந்தாலும் , அந்த படம் மிக பெரிய வெற்றிப்படமாவது அந்த படம் எந்த சூழ்நிலையில் வெளியாகிறது என்பதை பொறுத்துதான். இதை சரியாக புரிந்ததுகொண்டு வருட இறுதியான கிருஸ்துமஸ் மற்றும் புதுவருட விடுமுறையை குறிவைத்து   தனது படங்களை வெளியிட்டு தொடர் வெற்றிகளையும் பெற்றுள்ளார் சிவா கார்த்திகேயன்.

கடந்த 2017’ம் ஆண்டு  டிசம்பர் 22’ ம் தேதி சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான வேலைக்காரன் படம் வெற்றியடைந்தது.

அதை தொடர்ந்து கடந்த வருடம், தான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்ததோடு , படத்தை தயாரித்து தனது நண்பர் அருண்ராஜா காமராஜை இயக்குனராக்கி வெளியிட்ட படம் கனா. அந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதோடு பல விருதுகளையும் வென்றது. அந்த படம் வெளியானது டிசம்பர் 21,2018.

இந்த வருடம் வெளியான Mr.லோக்கல் படம் சரியாக போகவில்லை என்பதால் அடுத்தப்படத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து சரியாக அனைத்தையும் தேர்ந்தெடுத்து . அதோடு தனக்கு ராசியான டிசம்பர் இறுதியையும் இணைத்து சிவகார்த்திகேயன் அடித்திருக்கும் டிசம்பர் ஹாட்ரிக்தான்  “ஹீரோ”.