தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களுல் மிக முக்கியமானவர் தான் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் ஆரம்பத்தில் இவருக்கு கை தூக்கி விடவில்லை என்றாலும் இவரது விடாமுயற்சியால், முன்னணி நடிகர்களில் ஒருவராக தற்போது திகழ்கின்றார். இவர் தன் வசம் பல குழந்தை ரசிகர்களை வைத்துள்ளவர். கடைசியாக இவர் நடித்த அமரன் படம், இவரது கெரியரை மாற்றும் வகையில் அமைந்திருந்தது.
இதன் வெற்றியை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் படம் நடித்து முடித்து இருக்கிறார். அதனைத் தொடர்ந்து, சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படி பிசி செட்டுலை வைத்திருக்கும் இவர் அண்மையில் ஆங்கில ஊடகங்களுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அப்பேட்டியில் அவர், ஆரம்பகால வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் குறிப்பிட்ட சில விஷயங்கள் பின்வருமாறு, நான் வளர்ந்து வருவது சிலருக்கு பிடிக்கவில்லை. நான் நடிக்க படப்பிடிப்பிற்கு வருவதைப் பார்த்து, அவர்கள் என் முகத்திற்கு நேராகவே, ”என்ன தம்பி இந்த பக்கம்” என்று எல்லாம் கிண்டல் செய்துள்ளனர். ஒரு அளவுக்கு மேல் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
மூன்று வருடங்களுக்கு முன் திரையுலகை விட்டு விலக எண்ணுகிறேன் என என் மனைவி ஆர்த்தியிடம் கூறினேன். அதற்கு என் மனைவி, இப்படி நீங்கள் இனிமேல் நினைத்து கூட பார்க்க கூடாது. நடிகர் அஜித் மற்றும் விக்ரம் ஆகியவற்றிருக்கு பிறகு நீங்கள் மட்டும் தான் சினிமா பின்புலம் இல்லாமல் திரை உலகில் முன்னேறி வருகிறீர்கள்!! இந்த நேரத்தில், நீங்கள் இப்படி சோர்வடைய கூடாது என வலியுறுத்தினார்கள். அந்த வார்த்தைக்காக மட்டும் தான் நான் தற்போதும் சினி உலகில் பணிபுரிகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.