விஜய் டிவியில் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் ஆக சேர்ந்து பின் நாட்களில் தன்னுடைய திறமையால் தொகுப்பாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். அப்பொழுது சீரியல் நடிகர் தீபக்கிடம் சென்று தனக்கும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார் சிவகார்த்திகேயன். ஆனால் அதற்கு தீபக் அவர்கள் மறுத்துள்ளார்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் தீபக் அவர்கள் கூறியதாவது :-
ஆரம்பத்தில் நான் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் என்னிடம் வந்து சீரியலில் நடிக்க வாய்ப்பு கேட்டார். அப்பொழுது அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஏனென்றால் சீரியலில் வந்து சிலர் வெள்ளி திரைக்கு செல்வர். ஆனால் சிவகார்த்திகேயன் உடைய திறமையால் அவர் நேரடியாகவே வெள்ளி திரைக்கு செல்லலாம் என நான் அவரிடம் கூறியிருந்தேன் என்று தெரிவித்திருக்கிறார் தீபக்.
மேலும் அவர் கூறுகையில், நான் அவ்வாறு கூறிய பிறகு தான் சிவகார்த்திகேயன் சில திரைப்படங்களில் வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்படித்தான் சினிமா துறையில் அவருடைய ஆரம்ப காலகட்டம் அமைந்தது என்றும் அதன் பிறகு அவர் படிப்படியாக அவருடைய திறமையால் வளர்ந்தார் என்றும் கூறியிருக்கிறார் சின்னத்திரை நடிகர் தீபக்.
மேலும், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் என்னிடம் அண்ணா உங்களை பற்றி கொஞ்சம் பேசப்போகிறேன் என்று கூறினார். அப்பொழுது, நான் என்னை பற்றி ஏதோ கிண்டல் செய்யப் போகிறார் என்று பயந்தேன். ஆனால் அங்கு சிவகார்த்திகேயன் பேசும்போது நான் சில வருடங்களுக்கு முன்பு அவனிடம் கூறிய இந்த விஷயம் ஆனது ஞாபகமே வந்தது. அதாவது சிவகார்த்திகேயன் கூறியது, தீபக் அண்ணனிடம் நான் சீரியலில் நடிக்கட்டுமா என்று கேட்டேன். அப்பொழுது அவர் வேண்டாம் என்று சொன்னார். மேலும் நீ திரைப்படத்திற்கு முயற்சி செய் என்று அவர்தான் கூறினார் என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்ததாக மகிழ்ச்சியோடு தெரிவித்தார் சின்னத்திரை நடிகர் தீபக் அவர்கள்.