காலையில் வெளியான டாக்டர் படத்தின் போஸ்டர்:மதியத்துக்குள் காப்பி எனக் கண்டுபிடித்த ரசிகர்கள்!

0
191

காலையில் வெளியான டாக்டர் படத்தின் போஸ்டர்:மதியத்துக்குள் காப்பி எனக் கண்டுபிடித்த ரசிகர்கள்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் படத்தின் போஸ்டர் எந்த படத்தின் காப்பி என ரசிகர்கள் கண்டுபிடித்து விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, வினய் ப்ரியங்கா மோகனன் மற்றும் யோகிபாபு ஆகியோர் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். இவர் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் ஒன்றாக வேலைபார்த்த போது இருந்தே சிவகார்த்திகேயனும் இவரும் நண்பர்கள். சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11.03 மணிக்கு வெளியாகியுள்ளது. ரசிகர்களின் கவனம் ஈர்த்த போஸ்டர் பரவலான பாராட்டைப் பெற்றது.

ஆனால் மதியத்திற்குள்ளாகவே அந்த போஸ்டர் எந்த படத்தின் காப்பி என்பதைக் கண்டுபிடித்துள்ளனர் ரசிகர்கள். இந்த ஆண்டு ஆஸ்கார் பட்டியலில் கவனம் ஈர்த்த நைவ்ஸ் அவுட் என்ற படத்தின் போஸ்டரை சுட்டுதான் லேசாக மாற்றங்களை செய்து டாக்டர் படத்தின் போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதேப்போல சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் மற்றும் ஹீரோ போன்ற படங்களின் போஸ்டர்கள் வெளியான போதும் விமர்சன்ங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleஒரே நாளில் இரு படங்களின் ஃபர்ஸ்ட்லுக்: சிவகார்த்திகேயன் தரும் டபுள் ட்ரீட்
Next articleவிவசாயிகளை கடவுளாக நினைக்கிறேன்; நீர் மேலாண்மைக்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்க வேண்டும்!! அன்புமணி பேச்சு!