விஜயைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன்!! போஸ்டர் மாற்றுமா வாழ்க்கையை!!

Photo of author

By Gayathri

விஜயைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன்!! போஸ்டர் மாற்றுமா வாழ்க்கையை!!

Gayathri

Sivakarthikeyan followed by Vijay!! Poster will change life!!

தற்சமயம் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ஒரு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். முன்னணி நடிகர் விஜய் சினிமா வாழ்க்கையை துறந்து அரசியலில் ஈடுபட உள்ளார். சமீபத்தில் வெளியான கோட் திரைப்படத்தில் விஜய் உடன் சிவகார்த்திகேயன் நீங்க முக்கியமான வேலையாக போறீங்க! நான் இவரை பாத்துக்குறேன்!! என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இதன் மூலம் திரை வட்டாரத்தில் விஜய்க்கு அடுத்த படியாக சிவகார்த்திகேயன் மாறுவார் என்ற செய்தி பரவி வந்திருந்தது.

தற்சமயம் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் மின்னல் வேக வெற்றியை தொடர்ந்து பராசக்தி டீசரும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகின்றது. எனவே தளபதி இடத்தை இவர் தக்க வைத்துக் கொள்வார் என்று பலரும் கூறி வந்திருந்தனர். தற்சமயம் சிவகார்த்திகேயன் நற்பணி மன்றத்திலிருந்து தளபதி என்று அடையாளப்படுத்தப்பட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது தற்சமயம் வைரலாக பரவி வருகின்றது. எனவே இனிமேல் தான் இவர் நடிப்பின் மூலம் இந்த தலைப்பு அவருக்கு பொருந்துமா? இல்லையா? என்று தெரிய வரும் எனவும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். எனினும் அவரது கடின உழைப்பினால் அவர் இந்த நிலைமைக்கு உயர்ந்திருப்பது மறுக்க முடியாத உண்மையே. கூடிய விரைவில் அடுத்த தளபதியின் திறமைகளை திரையில் காணுவோம் என்றும் கூறி வருகின்றனர் சினிமா ரசிகர்கள் பட்டாளம்.