கமலுடன் இணையும் சிவகார்த்திகேயன்!! ராஜ் கமல் பிலிம்ஸ் உறுதி செய்தது!!

0
207
Sivakarthikeyan joins Kamal!! Raj Kamal Films confirmed!!
Sivakarthikeyan joins Kamal!! Raj Kamal Films confirmed!!

கமலுடன் இணையும் சிவகார்த்திகேயன்!! வெளிவந்த நியூ அப்டேட்!!

சிவகார்த்திகேயன் இவர் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து, 2012 ஆண்டு வெளியான இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய மெரீனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வந்தார். குறுகிய காலங்களிலேயே அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார்.

இவர் நடித்த அனைத்து படங்களுமே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இவர் தற்போது மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரின் அயலான் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்தை ஹிந்தியில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் வெளியிடுகிறார்.  இது அறிவியல் சார்ந்த கதை என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.

நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 கிராண்ட் பைனல் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அப்போது கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் படம் ஒன்றை தனது ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் என அறிவித்தார்.

தற்போது இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ். இத்திரைப்படம் சிவகார்த்திகேயனின் 21வது திரைப்படமாகும்.

மேலும் திரைப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. SK 21  படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

author avatar
CineDesk