தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வரும் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தனது சினிமா பயணத்தை சாதாரண மிமிக்கிரி ஆர்ட்டிஸ்டாக தொடங்கி தற்போது ஹீரோவாக உருவெடுத்துள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளதால் இவருடைய படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்து வருகிறது.
இவருடைய படத்திற்கான வசூல் தாறுமாறாக இருக்கும், ஆனால் சமீபத்தில் வெளியான “மிஸ்டர் லோக்கல் ஹீரோ” என்ற படமானது அவரது மார்க்கெட்டை பதம் பார்த்தது.
இதனால் சிவகார்த்திகேயன் எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குனர் நெல்சன் உடன் இணைந்து “டாக்டர்” என்ற படத்தில் நடித்து வருகிறார்
இதேபோல், “ரெமோ” படத்திலும் சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் அந்தப் படத்தையும் தனது சொந்த தயாரிப்பிலேயே படத்தை உருவாக்கினார். மேலும் சீமராஜா படத்தை தயாரித்து வெளியிட்ட லைக்கா நிறுவனம், இப்படம் பெரிய ஹிட் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் சிவகார்த்திகேயனுக்கு முழு சம்பளமான 15 கோடியையும் மொத்தமாக கொடுத்துவிட்டது.
ஆனால் எதிர்பார்த்தபடி படம் ஓடாததால், பணத்தை திருப்பி கேட்டபோது சிவகார்த்திகேயனுக்கு அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க மனம் இல்லாததால், நான் வேணா இன்னொரு படம் பண்ணித் தர்றேன் என்று லைக்கா நிறுவனத்திற்கு சிவகார்த்திகேயன் பதில் அளித்ததாக யூடியூப் வலை நண்பர்கள் இச்செய்தியை பரப்பி வருகின்றனர்.