சிவகார்த்திகேயனின் புதுப்படத்தில் இணைந்த யோகி பாபு… வைரலாகும் புகைப்படம்!

0
140

சிவகார்த்திகேயனின் புதுப்படத்தில் இணைந்த யோகி பாபு… வைரலாகும் புகைப்படம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்க உள்ள படத்துக்கு ‘மாவீரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தை ஆரம்பித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் டான் படத்தை ரிலீஸ் செய்துள்ள அவர் அடுத்து பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். இந்நிலையில் ஹீரோயின் வேடத்துக்கு பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் அறிவிப்புடன் கூடிய அறிவிப்பு சமீபத்தில் வீடியோ வெளியானது. படத்துக்கு ‘மாவீரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பெயரில் ரஜினி படம் ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது. வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள படத்தின் ப்ரமோஷன் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பது உறுதியாகியுள்ளது. படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் அதில் அவர் கலந்துகொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

http://https://www.instagram.com/p/CgDtAsaPJwO/?utm_source=ig_web_copy_link