3 நாட்களில் நிறுத்தப்பட்ட சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ பட ஷூட்டிங்… பின்னணி என்ன?

0
217

3 நாட்களில் நிறுத்தப்பட்ட சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ பட ஷூட்டிங்… பின்னணி என்ன?

சிவகார்த்திகேயனின் அடுத்த படமாக மாவீரன் திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது.

நடிகர் சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். இந்நிலையில் ஹீரோயின் வேடத்துக்கு பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் டைட்டில் அறிவிப்புடன் கூடிய அறிவிப்பு சமீபத்தில் வீடியோ வடிவில் வெளியானது. படத்துக்கு ‘மாவீரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பெயரில் ரஜினி படம் ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது. வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள படத்தின் ப்ரமோஷன் வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பது உறுதியாகியுள்ளது.  கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார். படத்தின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் அதில் அவர் கலந்துகொண்ட புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்தன. படத்துக்கு இசையமைப்பாளராக பரத் ஷங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்

கடந்த வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் 3 நாட்கள் நடந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் வெளியாகவில்லை எனினும் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பும் நடந்து தீபாவளிக்குப் படம் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous article9-ஆம் வகுப்பு மாணவியை சில்மிஷம் செய்த இரு வாலிபர்கள்!.. ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த சிறுமி?
Next articleஒரே நேரத்தில் 3 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியார்! தட்டி தூக்கிய காவல்துறை