“அனிருத்தை உருவக்கேலி செய்த சிவகார்த்திகேயன்!!” இணையத்தில் வைரலாகும் வீடியோ

Photo of author

By Rupa

தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளவர் “நடிகர் சிவகார்த்திகேயன்”. இவர் முன்பாக ஒரு பிரபலமான சேனலில் அறிமுகமானார். ஒரு ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றார். பின்பு அதே சேனலில் அவருக்குத் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய கவுண்டர்களாலும், சிறந்த பேச்சாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷின் மூலம் பல துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின்பு, அவருக்கு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான “மெரினா” படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படம் அந்த அளவுக்கு ஹிட் ஆகவில்லை என்றாலும் அவருக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் குவிந்து வந்தன. அவரின் திரையுலக வாழ்க்கையை “ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம்” ஆகிய இரண்டு படங்களும் முற்றிலுமாக மாற்றியது. இந்த இரண்டு படங்களுமே அவருக்கு மெகா பிளாக் பஸ்டர் படங்களாக மாறியது. இதனால் இவருக்கு மிகப்பெரிய ஃபேன் பேஸ் உருவானது.

இவர் நடித்த “டாக்டர்” படம் ரூ. 100 கோடி வசூலை எட்டியது. அதையடுத்து, அவர் நடித்த “டான்” படமும் ரூ. 100 கோடியை வசூலித்தது. இவ்வாறு தொடர்ந்து இரண்டு படங்கள் “ரூ. 100 கோடி கிளப்பில்” சேர்ந்து கொண்டது. இதனால் இவர் டாப்-10 நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார். அதற்குப் பிறகு நடித்த “அயலான், மாவீரன்” ஆகிய படங்களும் மென்மேலும் ஹிட் படங்களாக மாறின.

தற்போது அவர் நடித்த “அமரன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் ரூ. 300 கோடி வசூலை எட்டியது. அடுத்தடுத்து இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதைத் தவிர சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு, சுதா கொங்கரா ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் ஒரு பழைய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. ஆரம்பக் காலக்கட்டத்தில் அவர் ஆங்கரிங் செய்து வந்தார். அப்போது தனுஷ். அனிருத் ஆகியோர் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் அனிருத்தைக் கிண்டல் செய்யும் விதமாக, “இதோ பாருங்கப்பா, நான் ஏதோ துணி காய போட்டு இருக்காங்கன்னு நினைச்சேன்” எனக் கூற, அருகில் இருந்த தனுஷ், “சிவா, இது எனக்கும் பொருந்தும்” என்று கூறியிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் உருவ கேலி செய்த சிவகார்த்திகேயனை தனுஷ் வச்சு செஞ்சுட்டாரே என்று கமெண்ட்களைக் குவித்து வருகின்றனர்.

என்னதான் சினிமாத்துறையில் ஒருவர் அதிக வளர்ச்சி பெற்றிருந்தாலும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பெரும்பாலும் பல விமர்சனங்களுக்கு ஆளாகி வருவது வழக்கமாகிவிட்டது என்பது பலரின் கருத்தாக உள்ளது.