ரிலீஸூக்கு முன்பே ட்ரிம் செய்யப்பட்ட பிரின்ஸ்… 11 நிமிடக் காட்சிகள் நீக்கம்!

Photo of author

By Vinoth

ரிலீஸூக்கு முன்பே ட்ரிம் செய்யப்பட்ட பிரின்ஸ்… 11 நிமிடக் காட்சிகள் நீக்கம்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக உள்ளன.

சிவகார்த்திகேயன் நடித்து வரும்  பிரின்ஸ் திரைப்படம் ஒரு குறுகிய கால படமாக உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு மிகக் குறுகிய காலத்திலேயே  குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் எடுத்த படத்தை பார்த்த படக்குழுவினர் கிளைமேக்ஸில் முழு திருப்தி ஏற்படாததால் மீண்டும் ஷூட் செய்து சில காட்சிகளை மாற்றியுள்ளார்களாம். இப்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இப்போது நிறைவு பெற்றுள்ளது.

இந்த படத்தின் இயக்குனர் ஆந்திராவை சேர்ந்தவர். அவர் இயக்கிய ஜதி ரத்னலு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதை அடுத்து அவருக்கு இந்த பட வாய்ப்பு வழங்கப்பட்டது. சிவகார்த்திகேயன் தெலுங்கு மார்க்கெட்டை குறிவைத்து இந்த படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்துக்கு சென்சாரில் யு சான்றிதழ் அளிக்கப்பட்டது. மேலும் படம் 2 மணிநேரம் 23 நிமிடம் ஓடும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இப்போது படத்தில் மேலும் சுமார் 10 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக படங்கள் வெளியாகி ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்த பின்னர்தான் காட்சிகள் நீக்கப்பட்டு நீளம் குறைக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது ப்ரின்ஸ் குழுவினர் ரிலீஸூக்கு முன்பே காட்சிகளை ட்ரிம் செய்து நீளத்தைக் குறைத்துள்ளனர்.

மே மாதம் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் இப்போது தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸாகிறது. வரிசையாக டாக்டர் மற்றும் டான் என இரண்டு வெற்றிகளை சிவகார்த்திகேயன் கொடுத்துள்ள நிலையில் பிரின்ஸ் படத்தின் வியாபாரம் 100 கோடி ரூபாய் என்ற மைல்கல் சாதனையைப் படைத்துள்ளது.