நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 20 வருட தமிழ் சினிமாவில் யாருமே இவ்வளவு வேகத்தில் வளர்ந்தது இல்லை என்ற பெயரினை பெற்றிருக்கின்றார். அவர் விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பின் தொகுப்பாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவருக்கு கிடைத்த பட வாய்ப்புகளை நழுவ விடாமல் தக்க வைத்துக் கொண்டு தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். எந்த ஒரு நடிகருக்கும் இவ்வாறு ஒரு வளர்ச்சி கிடைத்ததே இல்லை என்ற அளவிற்கு சிவகார்த்திகேயனின் மீது பலர் பொறாமையில் உள்ளனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து டாக்டர் என்கிற படம் வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயனின் ஆரம்ப காலகட்டத்தில் அவரை அவமானப்படுத்தி சினிமாவை விட்டு துரத்த பல வேலைகள் நடந்துள்ளது. அதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் சிவகார்த்திகேயன் எவ்வாறு தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கிறார் என ரசிகர் ஒருவர் சமீபத்தில் டூரிங் டாக்கீஸ் பிரபலத்திடம் யூடியூப் வாயிலாக கேள்வி கேட்டுள்ளார்.
ரசிகர் கேட்ட கேள்விக்கு சித்ரா லட்சுமணன், மக்களின் பேராதரவு தான் அவருக்கு மிகவும் பெரிய வெற்றியை கொடுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தொலைக்காட்சியில் உள்ளபோதே பெண்கள் மற்றும் குழந்தைகளை கவர்ந்தது அவருக்கு மிகவும் சாதகமாக மாறியது.
இது ஒரு பக்கம் இருக்க அந்த வீடியோவில் தனுஷ், சூர்யா ஆகியோரை விட சிவகார்த்திகேயன் அதிக சம்பளம் வாங்குகிறார் என்றும் அவர் கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.