தனுஷ்க்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

தனுஷ்க்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ்  நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் கேப்டன் மில்லர்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படபிடிப்பு வேலைகள் சமீபத்தில் தான் தொடங்கியது, இதில்  தனுஷ் உடன் ப்ரியங்கா மோகன், சந்தீப் கிஷன், உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தற்போது அந்த படத்தின் போஸ்ட் திரையரங்க உரிமையை பிரபல ஓடிடி  நிறுவனம் அமேசான் பிரைம் ரூ. 38 கோடி கொடுத்து வாங்கியுள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தையும் அமேசான் பிரைம் ரூ. 34 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment