தெலுங்கு சினிமாவில் கால்வைக்கும் சிவகார்த்திக்கேயன்!! எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!!  

0
169
Sivakarthikeyan to make his mark in Telugu cinema !! Fans in anticipation !!
Sivakarthikeyan to make his mark in Telugu cinema !! Fans in anticipation !!

தெலுங்கு சினிமாவில் கால்வைக்கும் சிவகார்த்திக்கேயன்!! எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களை தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் உருவாக்கியுள்ளனர். அதிலும் சிறப்பாக நடிகர் வடிவேலு, விவேக், சந்தானம், யோகி பாபு போன்ற காமெடி நடிகர்களும் தற்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவையே கலக்கி வருகின்றனர்.

இதனிடையில் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம்  அறிமுகமாகி பின்பு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானார் நடிகர் சிவகார்த்க்கேயன்.  அவரின் நகைச்சுவை மற்றும் அவரின் சிரிப்புக்கு குழந்தைகள் முதல்  பெரியவர்கள் அடிமை. மேலும் அவரின் ரசிகர்கள் அவரை கொண்டாடினர்.  இதைத் தொடர்ந்து இவர் நடித்த மூன்றாவது படத்திலேயே இவருக்கு பெரிய புகழ் வந்தடைந்தது.

பின்பு பல படங்களில் கதாநாயகனாக வலம் வந்தார். மேலும் தானே படம் தயாரிக்கவும் ஆரம்பித்தார். இந்த நிலையில் தற்போது அவர் அனுதீப் என்பவர் இயக்கவிருக்கும் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் உருவாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleகோவிலுக்கு வந்த இடத்தில் நடந்த விபரீதம்! கேரளாவை சேர்ந்த பெண்ணுக்கு ஏற்பட்ட கதி!
Next articleஆரஞ்சு உடையில் அரையும், குறையுமாக யாஷிகா!! இது மட்டும் ஏன்மா போட்டுருக்க? என ரசிகர்கள் கேள்வி!!