வெளியானது சிவகார்த்திகேயனின் மாவீரன் டிரெய்லர்! தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படமா!!

0
66

வெளியானது சிவகார்த்திகேயனின் மாவீரன் டிரெய்லர்! தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஹீரோ திரைப்படமா!!

 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று(ஜூலை2) வெளியானதை அடுத்து இந்த டிரெய்லர் சமூக வலைதளங்களிலும் இணையதளத்திலும் டிரெண்டிங் ஆகி வருகின்றது.

 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தை இயக்குனர் மடோனா அஷ்வின் இயக்கியுள்ளார். மாவீரன் திரைப்படத்தில் நடிகை அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் மிஷ்கின், நடிகர் யோகி பாபு, தெலுங்கு நடிகர் சுனில், நடிகை சரிதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதையடுத்து மாவீரன் திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை அதாவது ஜூலை 2ம் தேதி மாலை வெளியானது.

 

மாவீரன் டிரெய்லரை பார்க்கும் பொழுது மாவீரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் அதிகம் பயம் கொண்ட நபராக நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் இந்த டிரெய்லர் காட்சியில் மேலே பார்ப்பது போல பல இடங்களில் காட்டப்பட்டுள்ளது.

 

டிரெய்லரின் கடைசியில் யோகி பாபு அவர்கள் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களிடம் இந்த தடவையாவது மேல பாக்காம இருடா” என்று கூறுவது போல காட்டப்பட்டிருக்கும். இதை வைத்து பார்க்கும் பொழுது பயந்ந குணம் கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் திடீரென்று மேலே பார்த்தவுடன் அவருக்கு எதோ ஒரு ஆற்றல் கிடைத்து அதன் பின்னர் மாவீரனாக மாறுவது தான் கதையாக இருக்கும் என்று தெரிகின்றது.

 

இயக்குநர் மிஷ்கின் அவர்கள் மாவீரன் திரைப்படத்தில் வில்லனாக மிரட்டி இருப்பார் என்று டிரெய்லரில் இருக்கும் மிஷ்கின் அவர்களின் காட்சிகளை வைத்து பார்க்கும் பொழுது தெரிகின்றது. நடிகை சரிதா அவர்கள் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் தாய் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மாவீரன் திரைப்படம் இந்த மாதம் அதாவது ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றது.