சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம்!! மாறிய தயாரிப்பு நிறுவனம்!!

Photo of author

By CineDesk

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம்!! மாறிய தயாரிப்பு நிறுவனம்!!

CineDesk

Sivakarthikeyan's movie Maveeran!! Changed production company!!

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம்!! மாறிய தயாரிப்பு நிறுவனம்!!

சிவகார்த்திகேயன் சின்னத்திரையிலிருந்து, வெள்ளித்திரைக்கு வந்தவர். இவரை இயக்குனர் பாண்டிராஜ் தனது மெரினா படத்தின் மூலம் அறிமுகம் செய்தார். குறுகிய காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரது மனதிலும் இடம் பிடித்துள்ளார். இவர் நடித்த அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இவர் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. இந்த படத்தில் அதிதி சங்கர், சரிதா, மிஷ்கின் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார். இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படம் முதலில் சுதந்திர தினத்தை மனதில் வைத்து ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிடலாம் என படக்குழு முடிவு செய்திருந்தது. அதே நேரத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படம் ரிலீசாவதால், மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதியை ஜூலை 14ம் தேதிக்கு படக்குழு மாற்றியுள்ளது. இதே போல் மாவீரன் படத்தை முதலில் தமிழகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவதாக தகவல்கள் வெளியானது.

அதன் காரணமாகவே ரிலீஸ் தேதியும் மாற்றப்பட்டது எனவும் தெரிகிறது. தற்போது ஒரு சில காரணங்களால் ரெட் ஜெயண்ட் நிறுவனம் மாவீரன் படத்தை வெளியிடுவதில் இருந்து விலகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் டான் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய அதிகாராபூர்வ தகவல் விரைவில் வெளியாகும்.