மஞ்சுளா மற்றும் விஜயகுமார் அவர்கள் இருவரும் காதலித்து ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே திருமணம் செய்து கொண்டனர். மேலும் இது ஒரு படமாகவும் அமைந்தது. இப்படத்தில் ரஜினியும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த படம் 48 ஆண்டுகளாகியும் என்றளவும் திரையிடப்படவில்லை.
இப்படம் குறித்து தர்பார் திரைப்பட விழாவில் ரஜினி அவர்கள் பகிர்ந்து கொண்டவை :-
பீம்சிங் கடைசியாக இயக்கிய, விஜயகுமார்-மஞ்சுளா காதல் திருமணம் நடத்திய, ரஜினியை வெளியேற்றிவிட்டு எடுத்த படம் தான் ” உன்னிடம் மயங்குகிறேன்…” படம் இன்றும் வெளிவராமல் பெட்டிக்குள் தூங்குகிறது என்று ரஜினி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், தயாரிப்பாளர் சிவசுப்ரமணியன். ’16 வயதினிலே’ ராஜ்கண்ணுவின் சகோதரர். தயாரிப்பாளர் கவுன்சிலில் புகாரளித்து ரஜினியை வரவழைக்க நினைத்தது பலிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இதுகுறித்து செல்வன் அன்பு அவர்கள் கூறியிருப்பதாவது :-
உன்னிடம் மயங்குகிறேன்” 1976. விஜயகுமார் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தார்.அந்த படத்தின் படப்பிடிப்பில் மேக்கப் ரூமில் படத்தின் இரண்டாவது நாயகனான ரஜினிக்கு ஒரு காஸ்ட்யூமை தந்தார்கள். அவர் புதுமுக நடிகர் என்பதால் யாரும் கண்டு கொள்ளவில்லை. ரஜினியோ தன் உடம்பை அதனுள் நுழைக்க சிரமப்பட்டார். “அது சிறிய சைஸ்…உங்களுக்கு சேராது” என விஜயகுமார் சொல்ல “காஸ்ட்யூமர் இதைத்தான் கொடுத்தார்” என ரஜினி அவர்கள் கூறியுள்ளார்.
விஜயகுமார் காஸ்ட்யூமரை அழைத்து “வேறு சரியான அளவுள்ள உடையை கொடுங்கள்” எனச் சொல்ல வேறு உடை தரப்பட்டது. அன்று முதல் இருவருக்கும் இடையேயான நட்பு வளர தொடங்கியது என்று கூறியுள்ளார் செல்வன் அன்பு.
மேலும் அவர் கூறுகையில், விஜயகுமாருக்கு திருமணமாகி மூன்றாவது குழந்தை அருண் பிறந்திருந்தார்.படப்பிடிப்பின் இடைவேளையில் மஞ்சுளாவை பார்த்து “நான் உங்களை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன். நீங்க என்ன சொல்றீங்க?” என கேட்டே விட்டார் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் விடாமல் மஞ்சுளாவிடம் அடுத்த நாள் நான் நேற்று கேட்ட விஷயம் என்ன ஆயிற்று என்றும் கேட்டிருக்கிறார். அதற்கு நடிகை மஞ்சுளா அவர்கள் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என கேட்க மஞ்சுளாவின் பெற்றோரிடம் கேட்கப்பட்டு இந்த திருமணம் சிம்பலாக படப்பிடிப்பு தளத்திலேயே நடைபெற்றது என்று கூறியிருக்கிறார்.
எதிர்பாராமல் இயக்குனர் பீம்சிங் உடல் நலமில்லாமல் இறக்க காரைக்குடி நாராயணன் இயக்கி படத்தை வெளியிட நினைத்த போது தயாரிப்பாளர் ரஜினி படத்தை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த படம் 48 ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் திரைக்கு வராமல் உள்ளது.